உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/412

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

தொழாமை கருதி அழுது வீழ்ந்தார்

1326. தொழுது விழாக்குறைக்குத் தொல்கடவுட் பேணி அழுது விழாக்கொள்வ ரன்னோ - முழுதளிப்போன் வாணாட்கோள் கேட்ட மடந்தையர் தம்மகிழ்நர் நீணாட்கோ ளென்று நினைத்து.

உள்மதிற் புக்கே உணவு கொள்வான்

1327. இற்றைப் பகலு ளெயிலகம் புக்கன்றிப்

பொற்றேரான் போனகங் கைக்கொளான் - எற்றாங்கொல் ஆறாத வெம்பசித் தீயா லுயிர்பருகி

மாறா மறலி வயிறு.

தாய்வாங்கு மகவைப் பேய்வாங்கு தன்மை

1328. தாய்வாங்கு கின்ற மகனைத் தனக்கென்று

பேய்வாங்கி யன்னதோர் பெற்றித்தே - வாய்வாங்கு வெல்படை வேந்தன் விரும்பாதா ரூர்முற்றிக் கொல்படை வீட்டுங் குறிப்பு.

ஆன்றோர் போல அடங்கிய பொறிகள்

1329. வெஞ்சின வேந்த னெயில்கோள் விரும்பியக்கால் அஞ்சி யொதுங்காதார் யாவரவர் - மஞ்சுசூழ் வான்றோய் புரிசைப் பொறியு மடங்கினவால் ஆன்றோ ரடக்கம்போ லாங்கு.

மண்ணக ஏணி விண்ணக ஏணியாம் 1330. பொருவரு மூதூரிற் போர்வேட் டொருவர்க் கொருவ 'ருடன்றெழுந்தா ராகில் - இருவரும் மண்ணொடு சார்த்தி மதில்சார்த் தியவேணி விண்ணொடு சார்த்தி விடும்.

395

-பெரும்பொருள் விளக்கம்

1. ருடனெழுந்தா.