உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/413

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

396

இளங்குமரனார் தமிழ் வளம் 17

முரசம் இடிக்க எரியும் வேந்து

1331. செருவெங் கதிர்வேற் சினவெம்போர் மாறன் உருமி னிடிமுர சார்ப்ப - வரவுறழ்ந்

தாமா வுகளு மணிவரையி னப்புறம்போய் வேமால் வயிறெரிய வேந்து.

-முத்தொள்ளாயிரம் 17

சுற்றம் இன்றிச் சுற்றிய வீறு

1332. மாமுது தாதை யேவலி னூர்துறந்து கானுறை வாழ்க்கையிற் கலந்த விராமன் மாஅ விரலை வேட்டம் போகித் தலைமகட் பிரிந்த தனிமையன் றனாது சுற்றமுஞ் சேணிடை யதுவே முற்றியது நஞ்சுகறை படுத்த 'புன்மிடற் றிறைவ

2

னுலகுபொதி யுருவமொடு தொகைஇத் தலைநாள் வெண்கோட்டுக் குன்ற மெடுத்த மீளி

வன்றோ ளாண்டகை யூரே யன்றே சொன்முறை மறந்தனம் வாழி

வில்லு முண்டவற் கந்நா ளாங்கே.

அகமும் கண்ணும் அருநீர் உகுத்தன

1333. மாதர்க் கெண்டை வரிப்புறத் தோற்றமும் நீலக் குவளை நிறனும் பாழ்பட

இலங்கை யகழி மூன்று மரக்கியர்

கருங்கா னெடுமழைக் கண்ணும் விளிம்பழிந்து

பெருநீ ருகுத்தன மாதோ வதுவக்

குரங்குதொழி லாண்ட விராமன்

அலங்குதட றொள்வா 3ளகன்ற ஞான்றே.

படைசூழ் இலங்கை, கடல்சூழ் அரணம்

1334. இருசுடர் வழங்காப் பெருமூ திலங்கை நெடுந்தோ ளிராமன் கடந்த ஞான்றை

1. புன்மிடற்று விரண

2. கோதையைத்.

3. ளழன்ற.