உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/414

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

எண்கிடை மிடைந்த பைங்கட் சேனையிற் பச்சை போர்த்த பல்புறத் தண்ணடை எச்சார் மருங்கினு மெயிற்புறத் திறுத்தலிற் கடல்சூ ழரணம் போன்ற

உடல்சின வேந்தன் முற்றிய வூரே.

120. எயில் காத்தல்

397

ஆசிரியமாலை

(பகைவர் தம் மதிலை முற்றுகை இட்ட காலத்து, மதில் அகத்தோர் அம்மதில் சிதையாவாறும், பகைவர் உட்புகாவாறும் காத்தல். இவர் நொச்சிப் பூச்சூடுவராகலின் இது நொச்சி எனப்படும். மேற்: தொல். பொருள். 65, 67. பு.வெ.மா. 86. “நொச்சி எயில் காத்தல்” வீரசோ. பொருள். 21. மேற்.)

மதில்காப் பதற்கு மலைந்தார் நொச்சி

1335. ஆடரவம் பூண்டா னழலுண்மார் சீறிய கூடரணங் காப்போர் குழாம்புரையச் - சூடினார் உச்சி மதிதவழு மோங்கு மதில்காப்பான் நொச்சி நுதிவே லவர்.

தாளும் தோளும் தனித்தனிக் கிடக்கை 1336. அகத்தன வார்கழல் நோன்றா ளரணின் புறத்தன 'போரெழிற் றிண்டோள் - உறத்தழீஇத் தோட்குரிமை பெற்ற துணைவளையார் பாராட்ட வாட்குரிசில் வானுலகி னான்.

-புறப்பொருள் வெண்பாமாலை 86, 92

வெண்மதி சூழும்விண்மீன் இனங்கள்

1337. குன்றுயர் திங்கள்போற் கொற்றக் குடையொன்று நின்றுயர் வாயிற் புறநிவப்ப - ஒன்றார்

விளங்குருவப் பல்குடைகள் வெண்மீன்போற் றோன்றித் துளங்கினவே தோற்றந் தொலைந்து.

1. பேரெழிற்.