உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/415

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

398

இளங்குமரனார் தமிழ் வளம் 17

புற்றழி நாகமாய்ப் புலம்பினர் வேந்தர்

1338. முற்றரண மென்னு முகிற்குருமுப் போற்றோன்றக் கொற்றவன் கொற்றவாள் நாட்கொண்டான் - 'புற்றிழந்த நாகக் குழம்போ னடுங்கின வென்னாங்கொல் வேகக் குழாக்களிற்று வேந்து.

ஒருவரும் நெருங்கா உயர்பே ரிருக்கை 1339. பொருசின மாறாப் புலிப்போத் துறையும் அருவரை கண்டார்போ லஞ்சி - ஒருவருஞ் செல்லா மதிலகத்து வீற்றிருந்தான் தேர்வேந்தன் எல்லார்க்கு மெல்லாங் கொடுத்து.

சீற்றந் தீயாய்ச் செய்யிய செயல்கள்

1340. மழுவான் மிளைபோய் மதிலா னகழ்தூர்ந் தெழுவாளோ னேற்றுண்ட தெல்லாம் - இழுமென மட்டவிழ் கண்ணி மறவேந்தன் சீற்றத்தீ விட்டெரிய விட்ட வகை.

தாக்குந் தகரென ஊக்கிச் சென்றவர் 1341. தாக்கற்குப் பேருந் தகர்போல் மதிலகத் தூக்க முடையா ரொதுங்கியுங் - கார்க்கீண் டிடிபுறப் பட்டாங் கெதிரேற்றார் மாற்றார் அடிபுறத் தீடு மரிது.

-பெரும்பொருள் விளக்கம்

விடலை பேணிய வியத்தகு காவல்

1342. பல்சான் றீரே பல்சான் றீரே வீழ்ந்த புரிசைச் சேர்ந்த ஞாயில்

1. புற்றழிந்த.

கணையிற் றூர்ந்த கன்றுமேய் கிடங்கின் மல்லன் மூதூர்ப் பல்சான் றீரே பலநாள் வருந்தி யிளையரு முதியரும் நன்னுதல் மகளிரு மின்னுங்கண் டுவப்ப