உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/417

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

400

இளங்குமரனார் தமிழ் வளம் 17

121. அமர்

ருபால் வீரரும் போரிடல், அமர். போர் என்பதும் இது. இவர் தும்பைப் பூச் சூடுவராகலின் இது தும்பைத் திணையாம்.

66

மேற்: தொல். பொருள். 70. பு.வெ.மா. 127. ‘அதிரப் பொருவது தும்பை” வீரசோ. பொருள். 121. மேற். "பொருதல் தும்பை புணர்வ தென்ப" - பன்னிரு படலம்.)

1. வளம்படு.

-

தும்பை மிலைந்தான் துப்புடை வேந்து

1345. கார்கருதி நின்றதிருங் கௌவை விழுப்பணையான் சோர்குருதி சூழா நிலனனைப்பப் - போர்கருதித் துப்புடைத் தும்பை மிலைந்தான் துகளறுசீர் வெப்புடைத் தானையெம் வேந்து.

வாளை வீசி வயவர் ஆடுதல்

1346. வாளை பிறழுங் கயங்கடுப்ப வந்தடையார் ஆளமர் வென்றி யடுகளத்துத் - தோள்பெயராக் காய்ந்தடு துப்பிற் 2கழல்மறவ ராடினார் வேந்தொடு வெள்வாள் விதிர்த்து.

-புறப்பொருள்வெண்பாமாலை 127, 147

விண்ணை வேண்டி விரைந்தார் வெங்களம்

1347. கலிவர லூழியின் வாழ்க்கை கடிந்து

மலிபுகழ் வேண்டு மனத்தர் - ஒலிகடல்சூழ் மண்ணகலம் வேண்டாது வான்வேண்டி யீண்டினார் புண்ணியமாம் போர்க்களத்துப் போந்து.

இடிமுகில் இடியால் இடிபட லொக்கும்

1348. இடியா னிடிமுகிலு மேறுண்ணு மென்னும் படியாற் பகடொன்று மீட்டு - வடிவேல் எறிந்தார்த்தார் மன்ன ரிமையாத 'கண்கண் டறிந்தார்த்தார் வானோரு மாங்கு.

2. கழன்மடவா ராட்டினார்

-பாரதம்