உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/420

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

403

செஞ்சோற்று விலையுந் தீர்ந்ததும் 'மனைவியர் தம்பிணந் தழீஇ நொந்துகலுழ்ந் திரங்கவும்

புதுவது புனைந்த மகளிர்க்கு

வதுவை சூட்டிய வான்படர்ந் தனரே.

பாசறை யகத்துப் பைந்தலை யதுவே

1356. அரிநறுங் கள்ளி னாண்மகிழ் செருக்கி நெருந லெல்லைநம் பெருமகண் முன்னர்த் திருமலி முற்றத் தோனே யின்றே கச்சை நின்ற கதழெரி நோன்றாட் புட்டி லார்க்கும் புனைதார் மாவொடு செருக்கிச் செய்த சிறுகட் பெரும்புண் முருக்கிதழ் மடந்தையர் முயங்கிய மார்பே ஆர்கெழு சுறாமீ னடங்குங் கிடங்கு நீர்மலி பழனத் ததுவே யிவன்றலை ல ஒளிருவேல் விடலை யுவப்பக்

களிறுகெழு வேந்தன் பாசறை யதுவே.

போர்க்களத் தொழிந்த புகழோ னீர்மை

1357. ஆட்புலங் கொன்று 'வாட்சால் போக்கி எஃகம் வித்திய வைக லுழவன்

அழித்துப்படை பாய்தலி னணிவளை யிழந்து மலைப்புற மலைந்த தோளிணை பலகையொடு போர்க்களத் தொழிந்த புகழோ 'னீர்மை கயமூசு கயலிற் றோன்றியவ

னிறமூழ்கி நின்ற வெஃகமிகப் பலவே.

செம்ம லொடு சேர்ந்தனன் நிலனே

1358. உண்மையு முறுதியு முயக்கொளல் பொருளென

எண்ணிநீ மொழித லெவன்கொலோ விவன்கைப் பண்ணமை கூர்ம்படை படவுயி ரிழந்தோர்

எண்ணிலர் நனிமிக் கனரே நமரே

1. மொத்தவே.

2. மனையர்.

3. வாட்குரல்.

4. னீர்மேய்.