உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/422

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

துறக்கம் புகவரின் தூக்குவன் வேலை

1362. கான்படு தீயிற் கலவார்தன் மேல்வரினுந்

தான்படை தீண்டாத் தறுகண்ணன் - வான்படர்தல் கண்ணியபி னன்றிக் கறுத்தார் மறந்தொலைதல் எண்ணியபின் னோக்குமோ வெஃகு.

405

-புறப்பொருள் வெண்பாமாலை 139, 142, 55 தார்தாங்கி நிற்கும் தனிப்பே றாளன்

1363. வெய்யோ னெழாமுன்னம் வீங்கிராக் கையகலச் செய்யோ னொளிவழங்குஞ் செம்மற்றே - கையகன்று போர்தாங்கு மன்னர்முன் புக்குப் புகழ்வெய்யோன் தார்தாங்கி நின்ற தகை.

பரும்பொருள் விளக்கம்

திண்டோர்க் கால்வலி கொண்ட திறலோன்

1364. களம்புக லோம்புமின் றெவ்விர் போரெதிர்ந் தெம்முளு முளனொரு பொருநன் வைகல் எண்டேர் செய்யுந் தச்சன்

திங்கள் வலித்த காலன் னோனே.

குடப்பால் உறைபோல் படைக்குநோய் ஆவோன் 1365. நறுவிரை துறந்த நரைவெண் கூந்தல் இரங்குகா ழன்ன திரங்குகண் வறுமுலைச் செம்முது பெண்டின் காதலஞ் சிறாஅன் மடப்பா லாய்மகள் வள்ளுகிர்த் தெறித்த குடப்பாற் சில்லுறை போலப் படைக்குநோ யெல்லாந் தானா யினனே.

புறங்கண்டு நகூஉம் புகழ்மேம் படுநன்

1366. வருகதில் வல்லே வருகதில் வல்லென வேந்துவிடு விழுத்தூ தாங்காங் கிசைப்ப நூலரி மாலை ஆடிக் காதலிற் றமியன் வந்த மூதி லாளன்