உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/430

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. கோதை.

புறத்திரட்டு

பேயும் பின்வரக் காயுங் கழலான்

1388. அடக்கருந் தானை யலங்குதார் மன்னர் விடக்கு முயிரு முணீஇயக் - கடற்படையுட் பேயு மெருவையுங் கூற்றுந்தன் பிற்படரக் காயுங் கழலான் களிறு.

413

-புறப்பொருள் வெண்பாமாலை 132

திங்கள் மீது திருக்கை நீட்டுதல்

1389. வீறுசால் மன்னர் விரிதாம வெண்குடையைப் பாற வெறிந்த பரிசயத்தால் - தேறாது செங்கண்மாக் கோதை சினவெங் களியானை திங்கள்மேல் நீட்டுந்தன் கை.

காய்சினக் களிறு நாவாய் போன்ற

1390. அயிற்கதவம் பாய்ந்துழக்கி யாற்றல்சால் மன்னர் எயிற்கதவங் கோத்தெடுத்த கோட்டாற் - பனிக்கடலுட் பாய்தோய்ந்த நாவாய்போற் றோன்றுமே யெங்கோமான் காய்சினவேற் 'கிள்ளி களிறு.

மருப்பே ஊசி; மார்பே ஓலை!

1391. மருப்பூசி யாக மறங்கனல்வேல் மன்னர் திருத்தகு மார்போலை யாகத் திருத்தக்க வையக மெல்லா மெமதென் றெழுதுமே மொய்யிலைவேல் மாறன் களிறு.

மதிலும் திறக்கும் மார்பும் உழுமால்

1392. உருவத்தார்த் தென்னவ னோங்கெழில் வேழத் திருகோடுஞ் செய்தொழில் 'தேரில் - ஒருகோடு வேற்றா ரகல முழுமே யொருகோடு மாற்றார் மதிறிறக்கு மால்.