உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/431

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

414

இளங்குமரனார் தமிழ் வளம் 17

கிள்ளி களிறு கொள்ளும் நாணம் 1393. கொடிமதில் பாய்ந்திற்ற கோடு மரசர் முடியிடறித் தேய்ந்த நகமும் - பிடிமுன்பு பொல்லாமை நாணிப் புறங்கடை நின்றதே. கல்லார்தோட் கிள்ளி களிறு.

நாடெலாம் நடுங்க நடக்கும் நால்வாய்

1394. கச்சி யொருகால் மிதியா வொருகாலால் தத்துநீர்த் தண்ணுஞ்சை தான்மிதியாப் - பிற்றையும் ஈழ மொருகால் மிதியா வருமேநங் கோழியர்கோக் கிள்ளி களிறு.

நரியும் பேயும் நண்ண வருங்கரி

1395. பாற்றின மார்ப்பப் பருந்து வழிப்படர நாற்றிசையு மோடி நரிகதிப்ப - ஆற்ற அலங்கலம் பேய்மகளி ராட வருமே இலங்கிலைவேற் கிள்ளி களிறு.

-முத்தொள்ளாயிரம் 19, 20, 21, 22, 23, 24, 25

கடலும் புயலுங் காற்றுங் கலந்தவோ?

1396. தோற்ற மலைகட லோசை புயல்கடாங் காற்றி னிமிர்ந்த செலவிற்றாய்க் - கூற்றுங் குறியெதிர்ப்பைக் கொள்ளுந் தகைமைத்தே யெங்கோன் எறிகதிர்வேல் மாறன் களிறு.

மன்னர் குடரால் மறைக்குங் கோடு

1397. அடுமதில் பாய 'வழிந்தன கோட்டைப் 2பிடிமுன் பழகழிதல் நாணி - முடியுடை மன்னர் 3குடரால் மறைக்குமே செங்கனல்வேற் றென்னவர் கோமான் களிறு.

1. எண்ணில்.

-முத்தொள்ளாயிரம் 26, 27.