உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/432

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

அருவி ஆடும் அழகுக் குடும்பம்!

1398. இளங்களிறொன்ற மடப்பிடி சார

விலங்கருவி நீராற் றெளிக்கும் - நலங்கிளர்வேற் றுன்னரும்போர்க் கோதை தொடாஅன் செருக்கின மன்னர் மதிலாய வென்று.

415

-முத்தொள்ளாயிரம்

மதியும் அரவும் குடையுங் கையும்

1399. மம்மர் விசும்பின் மதியு மதிப்பகையுந்

தம்மிற் றடுமாற்றம் போன்றதே - வெம்முனையிற் போர்யானை மன்னர் புறங்கணித்த வெண்குடையைக் கார்யானை யன்றடர்த்த கை.

ஆற்றில் படஞ்செல ஆர்வமாய் நோக்குவ

1400. வான்றோய் கழுகினமும் வள்ளுகிர்ப் பேய்க்கணமும் ஊன்றோய் நரியு முடன்றொக்க - மூன்று

கடமா நிலநனைக்குங் கார்யானைக் கிட்ட படமாறு நீப்பதனைப் பார்த்து.

மலையுறை தெய்வமாய் மாமேல் வருவோர் 1401. மாயத்தாற் றாக்கு மலையு மலையும்போற் காயத்தூ றஞ்சாக் களிற்றொடும்போயச் - சாயுந் தொலைவறியா வாடவருந் தோன்றினார் வான்மேல் மலையுறையுந் தெய்வம்போல் வந்து.

-பெரும்பொருள் விளக்கம்

பறியா முறியா திரியும் களிறே

1402. நெறியா நடைமா வொடுதேர் களெடுத் தெறியா வகையா நுதலே றுசரம் பறியா முறியா படையோர் படையுட் செறியா மதயா னைதிரிந் தனவே.

1. அழிந்திற்ற

2. பிடிமுன்பு செல்லாமை. 3. குடையால்

சூளாமணி 1237

4. மதில்பாய. 1398. இப்பாடல் முத்தொள்ளாயிரத் தொகுப்பில் சேர்க்கப்படாது விடுபட்டுள்ளது.