உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/450

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

மன்னர் 'செய்தொழி லயர மன்னிய வேள்வி முற்றிய வாய்வாள் வேந்தே நோற்றார் மன்றநின் பகைவர் நின்னொடு மாற்றா ரென்னும் பெயர்பெற்

றற்றா ராயினும் மாண்டுவாழ் வோரே.

நெஞ்சு நடுங்கித் துஞ்சார் வடவர்

1460. சிறப்புடை மரபிற் பொருளு மின்பமும் அறத்து வழிப்படூஉந் தோற்றம் போல இருகுடை பின்பட வோங்கிய வொருகுடை உருகெழு மதியி னிவந்துசேண் விளங்க நல்லிசை வேட்டம் வேண்டி வெல்போர்ப் பாசறை யல்லது நீயொல் லாயே நுதிமுக மழுங்க மண்டி யொன்னார் கடிமதில் பாயுநின் களிறடங் கலவே போரெனிற் புகலும் புனைகழல் மறவர் காடிடைக் கிடந்த நாடுநனி சேய

செல்வே மல்லே மென்னார் கல்லென் விழவுடை யாங்கண் வேற்றுப்புலத் திறுத்துக்

குணகடல் பின் னதாகக் குடகல்

2

வெண்டலைப் புணரிநின் மான்குளம் பலைப்ப வலமுறை வருதலு 'முண்டென வலம்வந்து நெஞ்சுநடுங் கவலம் பாயத்

துஞ்சாக் கண்ண வடபுலத் தரசே.

தண்பணை இருந்தும் கண்படை இல்லை

1461. உழுதூர் காளை யூழ்கோ டன்ன

1. ஏவல் செய்ய.

கவைமுட் கள்ளிப் பொரியரைப் பொருந்திப் புதுவர கரிகாற் கருப்பை பார்க்கும் புன்றலைச் சிறாஅர் வில்லெடுத் தார்ப்பிற் பெருங்கட் குறுமுயல் கருங்கல னுடைய மன்றிற் பாயும் வன்புலத் ததுவே

2. முண்டென் றலம்வந்து.

433