உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/474

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18.

19.

புறத்திரட்டு

செல்வநிலை கருதிச் சிவகதிக் குறுக

நில்லாது செல்வ நிலவா ருடம்படைந்தார் செல்லா ரொருங்கென்று சிந்தித்து - நல்லார் அருளுளம் புரிகுவ ராயி

னிருளறு சிவகதி யெய்தலோ வெளிதே.

457

-யாப். வி. 55. மேற்.

பரியினும் போகா துவப்பினும் வருமால்

பரவை மாக்கடற் றொகுதிரை வரவும் பண்டைச் செய்தி யின்றிவண் வரவும் பகற்பின் முட்டா திரவினது வரவும் பசியு மார்கையும் வரவும்

பரியினும் போகா துவப்பினும் வருமே.

-யாப்.வி. 40 மேற்.

அரசச் செல்வமும் அழியு மொருநாள்

20. வித்தகர் செய்த விளங்கு முடிகவித்தார் மத்தக மாண்பழிதல் காண்வாழி நெஞ்சே மத்தக மாண்பழிதல் கண்டான் மயங்காதே உத்தம நன்னெறிக்க ணின்றூக்கஞ் செய்தியேற் சித்தி படர்தல் தெளிவாழி நெஞ்சே.

21.

வளையாபதி. 4. யாப். வி. 93

8. (39) யாக்கை நிலையாமை

போகும் பூளையாய்ப் போகும் வாழ்வு

அந்தரத் துள்ளே அகங்கை புறங்கையா மந்தரம் போலு மனைவாழ்க்கை - அந்தரத்து வாழ்கின்றோ மென்று மகிழன்மின் வாணாளும் போகின்ற பூளையே போன்று.

-வீரசோ.யாப். 5 மேற். யாப். வி. 55 மேற்.