உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/506

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிப்புறை

ஆசிரியமாலை. 16 பாடல்கள்

  • (9) மூவிலை நெடுவேல் - மூன்று இலை வடிவாக அமைந்த நெடிய வேல் (சூலம்). ஆதிவானவன் - முழுமுதல் இறைவனாகிய சிவபெருமான்.

இடமருங்கு ஒளிக்கும் - இடப் பாகத்தே மறைந்துறையும். இமயக் கிழவி - இமவான் மகளாகிய உமையம்மை.

ஒப்பு: “பெண்ணுரு ஒருதிறன் ஆகின்று அவ்வுருத்

தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்.'

-

-புறம். 1.

நுதற்பிறை - நுதலாகிய பிறை. நுதல் - நெற்றி. மிகை - மிகுதி கதுப்பு கூந்தல். நுதலாகிய பிறையின்மேல் அமைந்த கூந்தலில் அணிந்த பிறை, மிகைப்பிறை ஆயிற்று. பிறை ஒரு தலைஅணி. வளைக்கை - வளையல் அணிந்த கை. ஆளி - சிங்கம். தானவன் அசுரன்; எருமைத் தலையுடன் வந்த மகிடாசுரன். மாள - சாவ. வென்ற. மலர்தலை உலகு - அகன்ற இடத்தை யுடைய

கடந்த

உலகு.

இமயக் கிழவி மெல்லடி இவ்வுலகு காக்க' என முடிக்க. ஒப்பு: “அடர்த்தெழு குருதி அடங்காப் பசுந்துணிப்

பிடர்த்தலைப் பீடம் ஏறிய மடக்கொடி

வெற்றிவேற் றடக்கைக் கொற்றவை.” - சிலப். 20. 34 - 37.

-

(49) நுமக்கு நீர் நல்குதிராயின் - உங்களுக்கு நீங்களே நன்மை செய்வதானால். பிறக்கும்: பிறங்கும் என்பதன் வலித்தல் விகாரம். பிறங்கும் - விளங்கும். மொழியினும் சொன்னாலும். தொழிற்

-

  • இவ்வெண்கள் புறத்திரட்டிலுள்ள பாடல்களைக் குறிக்கும்.