உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/507

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

490

இளங்குமரனார் தமிழ் வளம் 17

-

படின் - செயலாற்றினால். சினைவிடூஉப் பயக்கும் பிறவியில் இருந்து விடுதலை தரும். இவண் - இவ்வுலகம். உம்பர் - மேலுலகம். துறைதோறும் துறைதோறும் - எல்லா வழிகளிலும் நிறுத்துமின் - நிலைபெறச் செய்யுங்கள். அறிந்திசினோரே அறத்தியல்பை அறிந்தோரே.

-

அறத்தியல்பு அறிந்தோரே, நுங்கட்கு நீங்களே நலம்புரிய விரும்பின் எளிதென இகழாதும், அரிதெனக் கூறாதும் அறம் செய்க. அறத்தை மனத்தால் நினைப்பின் ஒளி விளங்கும். சொன்னால் நன்மை பெருகும். செயலுக்குக் கொண்டு வந்தால் வீட்டின்பம் கிட்டும். அதன் இயல்பை உணர்த்தினால், இவ்வுலகிலும் மேலுலகிலும் அதற்கு இணை அதுவேயாம். ஆதலால் எல்லா வழிகளிலும் அறத்தை நிலைபெறச் செய்வீர்களாக.

-

ஒப்பு: “ஒல்லும் வகையால் அறவினை ஓவாதே செல்லும்வா யெல்லாம் செயல்.

-

-

-

-

திருக். 33.

-

-

(283) மேதக - சிறப்பாக. மணித்தோடு பெய்து - உருத்திராக்க மணி அல்லது துளசிமணித் தொகுதிகளை அணிந்து. வாள்முகம் ஒளியுடைய முகம். கெழீஇய - பொருந்திய வல்லி - கொடி. ஒரு சிறை ஒரு பக்கம். சேக்கை - படுக்கை. மெல் உரி - மெல்லிய - மரவுரி. படை கலப்பை. குலமுறை பரம்பரை. வரையாது அளவு இல்லாது. வரை மலை. வென்று - ஐம்பொறிகளையும் வெற்றி கொண்டு. உடுத்த - சூழ்ந்த. வரைப்பின் - உலகின். இனிதன்று - இன்பமில்லாதது. மணித்தோடு பெய்தல், கான்யாற்றாடல், நிலத்துப் படுத்தல், மெல்லுரி உடுத்தல், உழாவிளையுளாம் காய், கனி, இலையுண்ணல், சுடரோம்பல், விருந்தோம்பல், மலையிலும் காட்டிலும் வாழ்தல் என்பனவற்றைப் பேணி ஐம்பொறிகளை வெல்லும்துறவு வாழ்வை அரசியல் வாழ்வோ டொப்பக் கூறினார். "நாலிரு வழக்கில் தாபதப் பக்கம்” என்பதற்கு இஃதெடுத்துக் காட்டு. - தொல். பொருள். 75. நச்.

-

(357) அரை - இடுப்ப. துகில் - மெல்லிய ஆடை. ஆரம் மாலை (முத்து மாலை) முருகு நாறும் - மணம் பரப்பும். தொடையல் -மாலை. (பூமாலை) புடையன - பக்கங்களில் உள்ளவை. பால்வெண் கவரியின் கற்றை பால்போலும் வெண்ணிறச் சாமரை. கால் -