உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/508

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

.

-

491

-

(குடைக்) காம்பு. தானை - படை. இனைய - இத்தகைய. 'இமைப்பதும் செய்தனர் ஆதலால் தேவரல்லர் மாந்தரே' என இயைக்க. களிறு யானை. மிசை - மேல். நெருநல் - நேற்று. பசிப்பிணி - பசியாகிய நோய் (உருவகம்). உணங்கி - வாட்டம் அடைந்து. துணி - - கிழிந்த கந்தை. மாசுமீப் போர்த்த யாக்கை - அழுக்கு மேலே படிந்த உடல். ஒருசிறை - (ஒதுக்கமான) ஒரு பக்கம். 'யானை எருத்தம் பொலிய’ எனத் தொடங்கும் நாலடிச் செய்யுளை நோக்குக. (நாலடி. 3)

-

ஒப்பு: “குடைநிழல் இருந்து குஞ்சரம் ஊர்ந்தோர்

நடைமெலிந் தோரூர் நண்ணினும் நண்ணுவர்.”

-

வெற்றிவேற்கை.

-

(369) யாணர் வரவின் - இவனது புதிய உலாவின்போது. மேனாள் - முன்னாள். நயந்த பேதையர் விரும்பிய இளம் பெண்டிர். உண்கண் - மையுண்ட கண், ஒளியுடைய கண்ணுமாம். வருபனி - கண்ணீர் போர்வை - தோல். பசையற உணங்கி கொழுமை சிறிதும் இன்றி வாடி. பழந்தலைச் சீறியாழ் - பழைமை யான சிறிய யாழ். பதிகெழு மூதூர் - குடியுடன் வாழ்ந்த பழைய ஊர். மன்றத்துப் பொதியில் - மன்றமாகிய பொதியில். அஃதாவது ஊர்ப் பொதுவிடம். புறஞ்சிறை - புறத்தே ஒரு பக்கம்.

66

இவன்

"நயந்த பேதையர் உண்கண் துயில் கொண்டில, உணங்கி, அழிந்து, மூப்புறப் பொதியிற் புறஞ் சார்ந்தனன்.” புறம். 251, 252 ஆம் பாடல்கள் இணைத்து நோக்குதற் குரியன.

(392) உள்ளது கரக்கும் இக் கள்ள யாக்கை - உள்ளே உள்ளே குறைகளை குறைத்துத் தோற்றமளிக்கும் வஞ்சத் தன்மை வாய்ந்த இவ்வுடல். மற்றமூன்று - வாதம், பித்தம், சிலேத்துமம். வழங்கலின் இயங்குதலின். உண்டி நல்லரசு உணவாகிய நல்ல அரசு. தண்டத்தின் வகுத்த நோன்பிணி - தண்டத் தலைவனாக அமைத்த வலிய நோய்.

உணவு, அரசன்; அவனால் நியமிக்கப் பெற்ற தண்டத் தலைவன் பிணி; அப் பிணியால் உடல் சூழப்பட்டிருத்தலின் முன்னர் அதனைத் தடுத்து நிறுத்தினாலும் பின்னர்த் தோன்றுவது கண்கூடாம். யாக்கை நிலையாமை கூறிற்று.