உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/509

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

492

-

இளங்குமரனார் தமிழ் வளம் 17

(402) நெருநல் - நேற்று. நின்ற - நிகழ்கின்றநாள். செல்லா நின்றது சென்று கொண்டிருக்கின்றது. முன்சென்று வருநாள் கண்டவர் யாரே - அடுத்து வருநாளை அது வருமுன்னே சென்று இத்தகையது என்று கண்டவர் எவரே? ஒருநாள் கைப்படுத்து உடையோர் இன்மையின் - தமக்கு இறுதியாகும் ஒருநாளைக் கையிற் பிடித்து வைத்துக் கொண்டவர் போலத் தெளிந்தவர் ஒருவரும் இல்லாமையால் நாடு மின் - (செய்தற்கு) விரும்புங்கள். வழாஅ - குற்றமற்ற. இன்பமும் புணர்மின் இன்பத்தையும் கடல். விசும்பு அடையுங்கள். அதான்று - அது அன்றி. நீரகம் வானம் பிடர்த்தலை உச்சி. புடையது பக்கத்துள்ளது. நேமி

-

-

மால்வரை - சக்கர வாளம் என்னும் நெடுமலை. கோள்வாய்த்துக் கொட்கும் கூற்று கொலைசெய்தலில் தவறாது சுழன்று திரியும்

-

-

இயமன். மீளிக் கொடு நா வலிய கொடிய நாக்கு.

66

'புகினும், ஏறினும், அப்புறம் புகினும் கூற்றத்து மீளிக் கொடுநா விலக்குதற்கு அரிது; அதனால் நாடுமின்; கொடுமின்; புணர்மின்” என்க.

ஒப்பு: “நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்

பெருமை உடைத்திவ் வுலகு

“மருந்தில் கணிச்சி வருந்த வட்டித்துக்

கூற்று வெகுண் டன்ன

99

(679) தன் - மேகம். தற்பாடு பறவை

-

-திருக். 336

புறம். 42. வானம்பாடி.

'தற்பாடிய தளியுணவின் புள்' (பட். 3-4) பசை அற - நீர்ப்பசை அற்றுப்போக. சூற் கொள்ளாது - (மேகம்) கருக் கொள்ளாது. மாறிக்கால் பொர - மாறிக் காற்றடிக்க. சீரை வெண்டலைச் சிறுபுன் கொண்மூ - ஆடை போன்ற வெண்ணிறமான இடத்தைக் கொண்ட சிறிய புல்லிய மேகம். காலூன்றா - பெய்யா. சேட்சென்று கரக்கும் - தொலைவிடத் தோடி மறையும். தீதுதர - தீமை பெருகுமாறு. பிறவும் எல்லாம் நெறிமாறு படுமே - மற்றை அறநெறிகள் அனைத்தும் மாறிவிடும். கடுஞ்சினம் கவைஇய ய கடிய சினம் பொருந்திய. காட்சி - தோற்றம். “கொடுங் கோல் வேந்தன் காக்கும் நாடு பறவை பசிப்ப, மழை காலூன்றா; வளவயல் விளையா; வாய்மை கரக்கும்; நெறிமாறும்” என்று இயைக்க.

-