உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/522

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

ஒப்பு: “கடாஅ யானைக் கலிமான்பேக’

-

505

-புறம். 145.

வெள்ளத்தானை - புது வெள்ளப் பெருக்குப் போன்ற படை!. வேந்து ஒப்பான் முன் - வேந்தனுக்கு ஒப்பான வீரன் முன், புகேஎன் ஆயின் - யான் புகாதேன் ஆயின். உள்ளது இரப்போன் - தம்மிடம் உள்ள ஒன்றை இரப்போனது. இன்மை கண்டும் - இல்லாமையைக் கண்டும். கரப்போன் சிறுமை மறைப்பவனது இழிவை. யானுறு கவ்வே - யான் அடைவேனாக. “யான் உள்ளழித்துப் புகேஎனாயின் கரப்போன் சிறுமையான் உறுக

-

(1314) இறை தலைவைத்தபின் - அரசன் தலைமை யாளனாக்கிச் சிறப்புச் செய்தபின். கூற்றுறழ் முன்பின் - கூற்றுவனையும் எதிர்க்கும் ஆற்றலொடு. அடுதல் - அழித்தல். அடாக்காலை - அழிக்க முடியாப் பொழுதில். விளிதல் - சாதல். விளியாக்கால் - சாவாக்கால். தோற்றம் பெருமை. தேசு - ஒளி. மாற்றம் ஒளி. மாற்றம் - புகழுரை. "அடுதல், அடாக் காலை விளிதல், விளியாக்கால் சான்றோர் மாற்றமளவும் கொடுப்ப வோ?'

-

(1315) விறல் வலிமை. ஒற்கத்து தளர்ச்சியின்போது. பிற்பிற் பின்னர். செம்மல் - பெருமிதம். தாமேயும் உயிர்போகு; அத்தகைய உயிர் போகாமை கருதிப் பரிவருப செய்பவோ? போரில் இறத்தலால் உதவிய வேந்தனுக்குச் செஞ்சோற்றுக் கடன் கழித்தவன்ஆவான்; பலர் புகழ் பேறு கிடைத்தவன் ஆவான்; பலரும் தொழுமாறு தெய்வநிலை எய்தியவனும் ஆவான் என்பதாம். இப்பாடலைத் தானை மறத்திற்கு மேற்கோளாகக் காட்டுவார் இளம்பூரணர். தொல். பொருள். 72.

(1316) நகையுள்ளும் - மகிழ்ச்சியான பொழுதிலும். இகலிய வேற்றுக் களத்தில் - முரண்பட்ட பகைவர் போர்க்களத்தில். தமராக -துணையாக. படுத்தல் - உண்டாக்கல். ஆர - பொருந்த. படுங்கொல் - மூடுமோ? (உறங்குமோ). கவன்று - கவலைப்பட்டு. “படுக்கலான், படான், படுங்கொல்" என இயைக்க. பகை நலிய என்பதும் தமாறாக என்பதும் இகலிய, தமராக எனத் திருத்தப்பெற்றன.

(1317) வேல் + தானை - வேற்றானை. நெரிதர - நெருங்கிவர. கடும் புனல் -பெருக்கெடுத்து வரும் வெள்ளம். கற்சிறை - கல்லணை. ‘வருபுனற் கற்சிறை கடுப்ப - மதுரைக். 725. பொற்பார்

-

அழகு