உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/521

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

504

இளங்குமரனார் தமிழ் வளம் 17

வரைப்பகம் கொண்டியாக” புறம். 198. மறலி - இயமன். மன்னர்க்கு புறம்.198. உறவிலராயினர் கண்ணோட்டம் இலராயினர் - என்பது பழிப்பது போலப் புகழ்தலாம். ஓர்ந்து ஆராய்ந்து. பெருஞ்சோற்று நிலையாவது,

“திருந்தார் தெம்முனை தெறுகுவர் இவரெனப் பெருஞ்சோ றாடவர் பெறுமுறை வகுத்தன்று”

என்பது புறப்பொருள் வெண்பாமாலை. (58)

-

(1274) ஆனாது - குறையாது. முழைபடுமுதுமரம் - பொந்து பட்ட முதிய மரம். எவ்வாயும் எல்லா விடங்களிலும். மடை நுழைந்து - துளைபடக் கருவிகள் புகுந்து. இடனுடை விழுப்புண் - அகன்றபோர்ப்புண். பாவை - பதுமை. மெழுகால் செய்யப் பெற்ற பதுமை ஒழுகிவிடா வண்ணம் துணியைப் பொதிந்து வைத்தல் போல புண்ணில் நெய் நிற்குமாறு பொதிதல் வேண்டும். சால்பு ஊக்கம். கிழி -துணி.

புகழோன் புண் கிழி பல கொண்டு பொதியல் வேண்டும்.

ஒப்பு: “இரும்பு சுவைக் கொண்ட விழுப்புண் நோய் தீர்ந்து மருந்துகொண் மரத்தின் வாள்வடு மயங்கி

வடுவின்று வடிந்த யாக்கையன்”

-புறம். 180. (1301) செவ்விக் கடாக் களிறு போர்த்தன்மை மிக்க ஆண்யானை. செம்மத்தகம் -செவ்விய நெற்றி. கெளவை - பழி வேலை, யானை மேல் விடுத்து வந்ததாகக் கூறும் பழி. கொண ரேனேல் - கொண்டுவராவிடின். எவ்வை - தங்கை என்றும் அக்காள் என்றும் கூறுவர் (ஐங்குறு. 88 ஔவை. சுது; பெருமழை) கடிபட்ட இல்லத்து திருமணம் பட்ட வீட்டில். கைபார்த்து இருப்பன் – அவர்கள் கையை எதிர்பார்த்து வாழ்பவனாக இருப்பேன். 'யான் கொணரேனேல் கை பார்த்து இருப்பன்' என்பதாம். பிறர் கையை எதிர்பார்த்து வாழ்தல் இழிவு! அவ்விழிவு எனக்கு எய்துமாக என்றானாம்.

-

-

(1304)கலிமான் - மணம் செருக்கிய குதிரை. நாகத்தன்ன மலைபோன்ற. காய்சினம் - அழிக்கும் சினம். யானையை யுடைய கலிமா னோயே.