உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/520

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(1241) புள்

-

கேட்டு. ஏயினன்

புறத்திரட்டு

503

-

புள்ளின் (பறவையின்) நிமித்தம். கேளா ஏவினன். தூஉய் - தூவி. வெட்சி மலரும் தினையும் தூவி, மறியை வீழ்த்தி விரிச்சி கேட்கும் முறைமை கூறப்பெற்றது. வேண்டிய பொருளின் விளைவு நன்கறிதற் கீண்டிருள் மாலைச் சொல்லோர்த் தன்று” என்பது புறப்பொருள் வெண்பாமாலை. (வெட்சி. 4) ஓர்தல் - கேட்டல்.

66

66

'எங்கோன் ஏயினன் ஆதலின் விரிச்சி ஓர்தல் வேண்டா பகைப் புலநிரை எயிற்புறம் தருதும்

என வீரர் தம் பெருமிதம் தோன்றக் கூறியதாம்.

-

-

(1251) மருவுதல் பொருந்துதல், கூடிப்பழகுதல் எப்பிறப் பாயினும் மருவின் மாலையோ இனிதே எந்தப் பிறப்புடைய உயிராயினும் அவற்றொடு பழகுதல் இன்பமேயாம். ஆகோள் மள்ளர் - பசுவினைக் கவர்ந்து சென்ற வீரர்; அவராவார் வெட்சியார். 'வெட்சி நிரைகவர்தல்' என்பது. அளவாக்கானம் - அளவிடற் கரிய காடு. புறத்து இறுத்தனெம் - புறத்தே தங்கினேம். தாம் தம் கன்று குரல் கேட்டன போல - பசுக்கள் தங்களுடைய கன்றின் குரலைக் கேட்டவை போல.

66

சென்றுபடு நிரை நாம் புறத்து இறுத்தனமாகத் தாம் தம் கன்றின் குரல் கேட்டன போல (எம்குரல்) செவியேற்றன. ஆதலால் எப்பிறப்பாயினும் மருவின் மாலையோ இனிதே” என்க.

-

(1257) வேத்தமர் - தலைமையான போர்; பகை வேந்தனொடு போர் என்றுமாம். ஏத்தினர்க்கு - வாழ்த்தினவர்க்கு. ஈத்தும் என்று - கொடுப்போம் என்று. மான் - குதிரை. சால - மிக. ‘படைக்கலத்திற் சாலப்பல மான்றேர் உடனீந்தான்' என்க. மீண்டுவந்து ஈத்தும் என்று எண்ணுமோ என்றது அவன் கொடையாண்மை குறித்தது.

-

(1258) உடனிருந்து தலைவன் உண்டல் வீரர்க்கு உவகை செய்வதாம். அது பெருஞ்சோற்றுடனிலை எனப்படும். தண்டேறல் மண்டி தண்ணிய மதுவின் கலங்கல். வீரர்க்கு வேந்தர் மதுக் கலங்கல் தருவது வழக்கு. "எமக்கே கலங்கல் தருமே" என்பது புறப்பாட்டு. (298) வழீஇயதற்கோ தவறு செய்ததற்கோ. இகழ்வதுபோல் புகழ்ந்தது. கொண்டி கொள்ளை. "தண்டமிழ்

-