உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/519

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

502

இளங்குமரனார் தமிழ் வளம் 17

வேண்டும் அனையையாகு" என்று உடன்பிறந்தார் சினமொழித்துச் சந்து செய்வித்தார்.

-

-

-

-

(786) மொய் வேல் வலியவேல், திரளான வேலுமாம். முரசெறிந்து முரசத்தை அறைந்து. ஒய்யென - விரைவாக. வலிதலைக் கொண்டது வலிமையை மேற்கொண்டது. என்றி என்று உரைக்கின்றாய். இயல்தார் மார்ப -திறமாகத் தொடுக்கப் பெற்ற மாலையையணிந்த மார்பனே. எவ்வழியாயினும் - எவ்வா றாயினும். அவ்வழி அவ்விடத்து. திண்கூர் எஃகின் - வலிய கூர்மையான வேலைக்கொண்ட. வயவர்-வீரர். புண்கூர் மெய் - புண்ணுற்ற உடல். உராஅய் - உராய்ந்து. பைந்தலையெறிந்த செவ்விய தலையை வெட்டிய. மைந்து - வீரம். மறவர் மலிந்து வீரர் ஊக்கத்தால் நிறைந்து. “மார்ப, வயவர்க் காணின், மறவர் மலிந்து வேந்துடை அரண் தீண்டற்காகாது" ஆதலால் முற்றுதல் ஒழி என்பதாம். இது பொன்முடியார் தகடூரின் தன்மை கூறியது து என்பார் நச். (தொல். பொருள். 67)

-

-

(844) வாரி - வெள்ளம். எஞ்சாமை நாறுக - ஒன்று குறையாமல் முளைக்க. நாறு ஆர - நாற்று நிரம்ப. முட்டாது முட்டுப்பாடு இல்லாது. ஒட்டாது சுருங்காது. கிளை பயில்க -தூறு செறிக. பால் வார்பு இறைஞ்சி பால் நிரம்பி மணியாகித் தலை தாழ்ந்து. ஏர்

-

-

கெழு செல்வர் - உழவர். போர் - நெற்குவியல். வைகுக

-

-

புது

கிடப்பதாக. உருகெழும் ஓதை - அச்சம் உண்டாக்கும் ஓசை. வெரீஇ – அஞ்சி. இரியும் - அகன்றோடும். யாணர்த்தாக வருவாயினதாக. வாரியால் வளஞ்சிறந்து நாடு பொலிவுறுதலை விரித்துக் கூறினார்.

""

(995) அரும்பொன் அன்னார் கோட்டி -"தங்கமே அனையவர் கூடிய சங்கம். ஆர்வுற்றக் கண்ணும் நுகரும் வாய்ப்புற்ற போதும். கரும் புலவர் - மனமயக்கம் உடையார். புல்லறிவாளரைப் புலவர் என்றது இகழ்ச்சிக் குறிப்பு. துயில் மடியா-துயிலில் மடிந்து, நெட்டுறக்கம் கொண்டு, வேறு இருந்து விண்டுரைப்பர் - வேறுபட இருந்து வெடிக்கப் பேசுவர். கரும்பு தின்பார் முன் நாய் இருத்தலால் பயன் கொள்ளாது அதுபோல் இவரும் பயன் கொள்ளார் என்பதாம். விண்டுரைத்தல் குரைத்தற்குக் குறிப்பு.