உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/518

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

"மன்பதை காக்கும்நன்குடிப் பிறத்தல் துன்பம் அல்லது தொழுதக வில்லெனச்"

செங்குட்டுவன் கூறுவது நோக்கத்தக்கது.

501

-சிலப்.25.103 - 4

(756) வெலச் சொல்லும் - வெற்றி கொள்ளத்தக்க சொல்லும். பழித்த சொல் தீண்டாமல் சொல்லும் - பழித்துக் கூறிய சொல் கலவாமல் கூறும் சொல்லும். நறுஞ்சாந்தணியகலம் - நறுமண மிக்க சந்தனம் அணிந்த அழகிய மார்பு. புல்லலின். தழுவுதலின். ஊடல் - தழுவாது இருத்தல்.

"சொல்லின் பயன்காணும் தான், சொல்லும் சொல்லும் சொல்லானேல் அகலம் புல்லலின் ஊடல் இனிது”

என இயைக்க.

-

-

(776) கால வெகுளி - காலன் கொள்வது போன்ற வெகுளி. பொறைய - சேர. நும்பி - நின்தம்பி. சாலுந்துணையும் - வேண்டிய அளவும். கழறி - இடித்துரைத்து. மேற் சேறல் தாக்குதற்காக அவன் மேற் செல்லல். அது கண்டாய் - அவ்வாறு செல்லாமையே. நூல் கண்டார் கண்டநெறி - நூலாராய்ச்சி மிக்கவர்கள் தெளிந்த அறநெறியாகும்.

66

-

-

(785) ஓடை - நெற்றிப்பள்ளம். வெளிறு - வயிரம் இல்லாமை. வெளிறில் - வயிரம் இல்லாமை இல்லாத. அஃதாவது வயிரம் உள்ள. களிறுகெழுவேந்தே - யானை களையுடைய அரசே. கேண்மதி கேட்பாயாக. சினவாது - சினங் கொள்ளாது. இருதலைப்புள் இருதலைகளையுடைய ஒரு பறவை. ஒரு குடர்ப் படுதர ஓர் இரை துற்றும் ஒரு குடலில் சேருமாறு ஓர் இரையை உண்ணும். "தூற்றுவ துற்றும்" - பரிபா. 20:51. அழிதரு வெகுளி - அழிவு தரும் வெகுளி. தாங்காய் - பொறாய். வழிகெடக் கண்ணுறு பொழுதில் - வழி தோன்றாவண்ணம் கண் கேடுற்ற பொழுதில். கைபோல் எய்தி கை வழிகாட்டுவது போல் முன் வந்து. நோதக - வருந்த. முன்னவை - முற்கூறிய வழி தோன்றாமையும், கண் கேடும். புணை - மிதவை. தலைப்படுதல் - கூடுதல். தாழ்தல் - தடுத்துக் கரையேறுதல் "வேந்தே சினவாது கேண்மதி; நீ துணையாகலுமுளை; நம்முன் நுமக்குத்துணையாகலும் உரியன். வினை பெரிதாயினும் அடங்கல்