உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/517

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

500

இளங்குமரனார் தமிழ் வளம் 17

இணையான. இருபிறப்பாளர் - அந்தணர். மாதீது ஒரூஉக - பெருந் தீமைகளைச் செய்யாது ஒழிக.

-

-

(227) தறுகண்ணர் - வீரர், நூற்றுவரிற் றோன்றும் - நூற்றுவர்க்கு ஒருவரே தோன்றுவர். ஆற்றுளித் தொக்க - கடனாற்றுதற்குக் கூடிய. அவை - கூட்டம். மாற்றம் பதிலுரை. ஆற்றக்கொடுக்கும் சரியாகக் கொடுக்கும். தேற்ற - தெளிவாக. பரப்புநீர் வையகம் நீர் சூழ்ந்த நிலஉலகம். தேரினும் ஆராய்ந்தாலும். எள்ளா இகழாத.

-

-

நூற்றுவரில் ஒருவனே சிறந்த வீரன். சான்றோர் கூடிய அவையில் தெளிவாகத் தருக்கம் செய்து வல்ல வல்லவன் ஆயிரத்தில் ஒருவனே. ஆயினும், இரப்பவரை இகழாத ஒருவனை உலக முழுவதும் தேடினும் இரான் என்க.

(666) இறப்ப - மிக. இசைபடுவது - புகழ்பெறுவது. அறக்

கோலால்

-

அறநெறிக்கண் அமைந்தசெங்கோலால். செற்றம் மனக்கறுவு. இன்னாத வேண்டா இனிமையில்லாதவற்றை விரும்பாத. இகல் வேல் மறமன்னர் - வெற்றி வேலையுடைய வீர வேந்தர். ஒன்னார்க்கு உயர்ந்த படை - பகைவர்மேல் எடுத்துவிட்ட

படை

"இன்னாத வேண்டா மன்னர் ஒன்னார்க்கு உயர்ந்தபடை சிறப்பிற் சிறுகுவ துண்டோ?”

என இயைக்க.

-

-

(667) அரசிற் பிறத்தல் அரசர் குடியில் பிறத்தல். அறம் புரிந்தன்று - அறம் புரிந்ததன் பயன் அன்று. அம்ம - இடைச்சொல். துறந்த தொடர்பொடு துறவி போன்ற இயல்பொடு. துன்னிய கேண்மை சிறந்தார்க்கும் - நெருங்கிய உறவிற் சிறந்தவர்க்கும். பாடு செயலீயார் - (அவர்க்கெனச் சிறப்பாகக்) கடப்பாடு செய்ய யலார். பிறந்த வேல் வென்றி - பிறந்த குடியின் போர் வெற்றி.

66

-

'துன்னிய கேண்மையர்க்கும் பாடுசெயலீயா அரசிற் பிறத்தல் அறம் புரிந்தன்று!”

என்று இகழ்வதுபோல் செங்கோற் சிறப்பு உரைப்பதாம்.