உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/516

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

499

அமரர் கோன் அமைச்சர் வழியின் ஆயது அருக்கன் பாம்பினால் மழுங்கக் கண்டுகொல் என இயைக்க. இந்திரன் கண்கள் ஆயிரம் போலவே அமைச்சரும் ஆயிரவர் போலும்.

(1057) தீ தன்னை உண்பிப்பவற்றை எல்லாம் எரித்து அழித்தலால் நன்றி சிதைப்பதாம். உண்டி கையகத் திருப்பினும் அதனை உண்ண வொட்டாது வெறுப்பூட்டுவது நோய். வேய் மூங்கில். உராய்ந்து தீப்பற்றுதலால் இனத்தோடு அழிப்பது வேய்.

-

(1058) நாளு நாளும் -நாள் தோறும். நவின்று - பாராட்டி யுரைத்தது. பகைவர் நண்பர் எனப் பாராது போருக்கு நெருங்கிய எவரையும் வாள் அழிக்கும். இவரும் அத்தகையர் என்பதாம்.

தகடூர் யாத்திரை. பாடல்கள் 44

(10) வியத் தக்க - வியக்கத்தக்கவை. வெண்மை - அறிவின்மை. வெண்மையில் தீர்ந்தார் அறிவின்மை நீங்கினார். அறிவாளர். வியத்தக்க அல்ல - வியக்கத் தக்கவை அல்லாதவை. தாம்போல எல்லாம் தம்மைப் போல அறிவில்லாதார் கூறுவதை எல்லாம் அறிவுடையார் வியக்கத்தக்கவற்றையே வியப்பர். அறிவிலார் தம்மைப் போலும் அறிவிலார் கூறும் அனைத்தையும் வியந்து பாராட்டுவர்.

-

(19) சிதாஅர் - உடை. (மரவுரி)

“வேற்றிழை நுழைந்த வேர்நனை சிதாஅர்

“பாறிய சிதாரேன்”

-

புறம். 69.

புறம். 150.

-

ஏற்று இரந்துண்டும் பிறரிடம் கையேந்தி இரந்துண்டும். படிவத்தர் - தவநெறியர். உண்ணின் - உண்ணுங்கால். தீ ஊட்டி உண்ணும் - முதற்கண் தீக்கு உண்பித்துப் பின்னர்த் தாம் உண்ணும். தீயவை ஆற்றுழி - பிறர் தமக்குத் தீயவை செய்யுங்கால். ஆற்றி பொறுத்து. கழுவுபு தோற்றம் அவர்க்குக் கழுவாய் தேடும் பெருமை. அவிர் - விளங்கும். கோலர் - கோல் உடையவர். துவர் மன்னும் ஆடையர் - செறிந்த காவியாடையர். பாடுஇன் அருமறையர் அரிய மறைமொழிகளை இனிய இசையுடன் பாடுபவர். நீடின் உருவம் சிறந்த உருவம். தமக்குத் தாமாய தமக்குத் தாமே

-

-

-