உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/515

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

498

இளங்குமரனார் தமிழ் வளம் 17

உவக்கில் இவை உண்டாம்; ஆதலால், வெஃகாமை வேண்டும்" என்பதாம்.

(292) ஊறு- தொட்டுணர்வு அல்லது உற்றறிதல். அசுணம் - ஒரு வகைப் பறவை. விலங்கென்பாரும் உளர். அளி - வண்டு. பதங்கம் விட்டில். ஐம்பொறிகளில் ஒவ்வொன்றால் கெடுபவை இவை. இவை எல்லாம் ஐம்பொறிகள் அனைத்தும். கௌவை துயர். வரையாது விலக்கி ஒதுக்காது. "மாந்தர் சாயலாரை

-

வரையாது வைப்பதெவன் என இயைக்க.

-

(306) எரிவிடம் - எரிபோன்ற விடம். எரியும் விடமும் எனினுமாம். அருநரகு - நீங்குதற்கு அரிய நரகம். நவை - குற்றம். உளமொழி மெய்நெறி ஒழுகி உள்ளத்தாலும், உரையாலும் உடலாலும் நேரியவழியில் நடந்து. உறுபொருள் சிதைக்கும் தம்மிடத்து உள்ள பொருளையும் அழிக்கும். நனி நன்று - மிக நன்று.

-

(307) பிளவு கெழு - வேறுவேறாக அமைந்த. எரிகொளுவல் தீ வைத்தல். ஈர்தல் - அரிதல். உளைய வருந்த. தடிதல் துண்டாக்கல். உறுதுயரம் - மிகப் பல துன்பம். கிளையறவு தரும் உறவினர் இலராகச் செய்யும். அரிய புகழ் கிட்டுதற்கு அரிய புகழ். நனி விடுதல் - நெஞ்சால் நினைக்காமலும் மிக ஒதுக்குதல்.

(442) விண்ணில் இன்பமும் - வானுலக இன்பமும். வீதல் - அழிதல். மாய்தல் - அழிதல். எண்ணில் - ஆராய்ந்தால். ஈறு இலாதது முடிவற்றது. அஃதாவது வீட்டின்பம். மற்றவை - முடிவுள்ளவை. அஃதொன்றே அழியாப் பேரின்பம். நண்ணி - அடைந்து. நயக்கற் பாலது - விரும்பத்தக்கது.

(448) கழறுவார் - இடித்துரைப்பார் (பாகர்). முனிந்திடும் சினந்து பார்க்கும். நீரார் - தன்மையார். சுணங்கன் - நாய்.

"முத்தியை விளக்கு நீரார் களிறு போல்வார்

பற்றிடைச் சுழலு நீரார் சுணங்கன் போல்வார்.'

(742) அருக்கன் - கதிரோன். மழுங்கல் கதிரோன். மழுங்கல் - ஒளி கம்முதல்.

அமரர் கோன் - இந்திரன்.

-