உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/514

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

497

உவமையாயிற்று. இவ்வாறே, “பலர் புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்கு” (முருகு. 2) என்று நக்கீரர் பாடுவார்.

ஒப்பு; “நீனிறக் கொண்மூ நெற்றி மூழ்கும்

வானிற வளர்பிறை" பெருங். 1: 41: 74.

நளவெண்பாவின் பாயிரப் பாடலாக இதனைக் காட்டினார் சிலர் (பெருந்.98)

(601) ஆர்கலி - கடல்; ஒலி மிக்கது என்னும் காரணப் பொருட்டு. ஞாலம் - உலகம். ஆர்கலி ஞாலம் கடலால் சூழப் பட்ட உலகம். பெறலருமை யாது - பெறுதற்கு அருமையானது எது? எதுவும் இல்லை என்பதாம். அரோ: அசைநிலை. வார்திரை நெடிய அலை. மாமகர வெள்ளம் - பெரிய மீன்கள் நிரம்பிய கடல். நாப்பண் - இடையே. போர் மலைதல் - போரிடல். அறக்காவலும். அருளும் நிரம்பிய அரசற்குக் கடற்போர் வெற்றியும் எளிதில் கை கூடும். செங்கோல் பேணிய வேந்தன் சேரன் செங்குட்டுவன், கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவனாகத் திகழ்ந்ததை அறிக.

-

(1476) கருங்கலி முந்நீர் - கருமையும் ஆரவாரமும் உடைய கடல். இருங்கடி சிறந்த காவல். மண்மகள்: உருவகம். ஏனம் - பன்றி, பெரும் பெயர் ஏனம் - வராகமூர்த்தி. எயிறு - பல்; ஈண்டுக் கொம்பு. சுரும்பு அறை - வண்டு ஒலிக்கும். “தொண்டையன் தோள் மண்மகளை ஏந்தி யபெரும்பெயர் ஏனத்து எயிறனைய” என்க. இதனால், தொண்டை மான் உலகனைத்தும் ஒரு குடைக்கீழ் ஆட்சி புரிந்தான் என்பது கூறினார்.

வரலாறு: இரணியாக்கன் நிலவுலகைச் சுருட்டிக் கொண்டு பாதலம் செல்ல, திருமால் வராக மூர்த்தியாகித் தம் கொம்பால் மீட்டுக் கொணர்ந்த புராணக் கதை இதனுள் அடங்கியுள்ளது.

சாந்திபுராணம்

பாடல்கள் 9

(173) உரித்து - உரியது. தானம் - கொடை. கிளைக்கு ஈயில் - சுற்றத்தார்க்குத் தந்தால். ஈனம் இழிவு. உய்க்கும் - செலுத்தும்.

எச்சம்

-

-

புகழ். மானம் – பெருமை. துய்க்கின் - தான் நுகர்ந்தால்

ஊனத்து நரகத்து

இழிந்த நிரயத்தில். "வேந்தே பிறர்பொருள்