உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/513

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

496

-

-

இளங்குமரனார் தமிழ் வளம் 17

-

வழுக்க - வாய்மை தவற. பேராளன் - பெருமையானவன். ஈண்டு நலம் மிகுநலம். வடாஅது – வடக்கு. துவன்றிய நிறைந்த, செறிந்த. 'கள்ளி' - ஊரின் பெயர். தாழி - வள்ளல் பெயர். காதலின் மேவலன் அன்பு நண்பாளன். “கூடலின் வடாஅது கள்ளியம் பெரும்பதித்தாழி பிறர் பிறர்க்கீந்து, விருந்துண்டு மிகினே தானும் உண்ணும்” என்க.

ஒப்பு: தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு.

இராமாயணம் – பாடல்கள் 2.

- திருக். 212

இராமாயணத்தில் இடம்பெறாத பாடல்கள் மட்டும்

-

(332) குறைத்தவன் - வெட்டித்துண்டமாக்கியவன். கொணர்ந்து- கொண்டு வந்து. ஒன்றிய பொருள் - உரியவிலை. நன்றிது வென்றவன் ஊன், உடற்கு நல்லது என்று கூறியவன். நாவிற் பெய்தவன் உண்டவன். இதன்கண் அறுவர் என எண்ணப் பெறுதலால் கொணர்ந்து விற்றவன் என்பதில் கொணர்ந்தவனும் விற்றவனும் எனக் கூட்டிக் காண்க.

(725) எய்த இன்னல் – வரக்கூடாத கொடிய துன்பம். சேண் நெறிக்கண் ஏகிட - நெடுந்தொலை வழியிற் செல்ல. கண்ணி - சீதை. வல்லவாய - வலிமை பெற்றன. இவன் - இலக்குவன். பன்னசாலை - பன்னகசாலை. (குடிசை)

-

இரும்பல் காஞ்சி

(5) கொண்மூ

-

-

பாடல்கள் 8.

மேகம். நீர்கொண்டது என்னும்காரணப் பொருட்டு. நெற்றி - உச்சி. நிழல் நாறி - ஒளியுடன் தோன்றி. நிழல் ஒளி; “நிழல் திகழ் நீல நாகம் நல்கிய கலிங்கம்” - சிறுபாண். 95-6. நாறி - தோன்றி; “மலை நாறிய வியன் ஞாலத்து” - மதுரைக். 4. சீக்கும் - அழிக்கும், நீக்கும். காய்கதிர் கதிரோன்: வினைத்தொகை. கோல - அழகிய. மணித்தோகை - நீலமணி போன்ற தோகை. மாக் கடற்சூர் - பெரிய கடற்கண் மறைந்திருந்த சூரபன்மன். சேவடி சிவந்த திருவடி. நீல மயில்மேல் தோன்றிச் சூரனை அழித்த செவ்வேட்கு நீல முகில்மேல் தோன்றி இருள் ஒழிக்கும் செங்கதிர்