உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/524

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

507

இருப்பவன் ‘கீழே நிற்பவன் வீழ்த்தினானே' என நாணங் கொள் வானே என உணர்ந்து அவனையும் வெட்டி யழியான். காளை போன்ற இளையனது கருத்தின்படி களத்தே வருதலால் களிற்றையும் வெட்டி வீழ்த்தான். இவ்வீரன் செருக்கிருந்தவாறு என்னே!

66

-

(1342) பல் சான்றீரே - பல குணங்களால் நிறைந்து அமைந்தவரே. புரிசை - கோட்டை. ஞாயில் சூட்டு என்பதோர் மதில் உறுப்பு. ஞாயிற், ஏப்புழைக்கு நடுவாய் எய்து மறையும் சூட்டு” என்பர் நச். (சீவக. 104) “அம்பு எய்தற்கு மதின்மேல் சமைத்த ஒரு மதிலுறுப்பு; இதனை அடியார்க்கு நல்லார் குருவித்தலை என்பர்" (பட். ஆரா. 95 மறைமலை.) கணையிற்றூர்ந்த - கணையின் தாக்குதலால் மேடான. அகழி கன்றுமேயுமாறு புற்றரை யாயிற்று. கிடங்கு - அகழி. நுதல் நெற்றி. யாமங் கொள்பவர் - யாமந்தோறும் காவல் செய்தலை மேற் கொள்ளும் காவலர். (நற். 132) ஒழிய - பணிஒழிய. குரல் - கொத்து. நொச்சி - ஒருவகைப்பூ. எயில் (மதில்) காக்கும் வீரர் அணிவது.

66

“ஏப்புழை ஞாயில் ஏந்துநிலை அரணம் காப்போர் சூடிய பூப்புகழ்ந் தன்று”

என்பது புறப்பொருள் வெண்பாமாலை. (நொச்சி. 1.)

-

(1343) பொறிவரி பொலிவுடைய நெற்கதிர். அன்ன – போன்ற. உளை - பிடரிமயிர். வயமான் வெற்றிப்பாடுடைய

-

-

-

குதிரை. தோலா உரன் - தோல்வி கண்டறியாத வலிமை. ஒன்னார் -பகைவர். உட்கும் - அஞ்சச் செய்யும். சுரை - பூண். சுடர்ப் பூ ணோன் ஒளியமைந்த அணிகலம் பூண்டோன். இறை தலைவன். மா - குதிரை. கறுவு - செற்றம். கதுவ பற்றி எரிய. குறுகலோம்புமின் நெருங்கா திருங்கள். குறை நாள் மறவீர் வாழும் நாள் குறைந்த வீரர்களே. நெருநல் எல்லி - நேற்றுப் பகலில். நரை - கருமை கலந்த வெண்மை. நூறி - அழித்து. தெரியல் மாலை. ஆரணங்கினன் - மிகத் துன்புறுத்தினன். “மறவீர் நெருநல் எல்லி யானை நூறி ஒழிந்தோன் தம்பி குறுகல் ஓம்புமின்.'

-

(1370) கார்த்தரும் புல்லணல் - கருமையான அரிய இளந்தாடி. கண்ணஞ்சாக் காளை அஞ்சாத வீரன். தார்ப்பற்றி - தூசிப் படையைச் சேர்ந்து. ஏர்தரும் - அழகமைந்த. நாட்பு போர். கணம் - - கூட்டம். மா - குதிரை. கிணைவன் - துடி கொட்டுபவன்.

-