உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/564

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

131.

132.

133.

134.

135.

136.

137.

138.

139.

புறத்திரட்டு

547

சீர்த்ததுகள் - சிறந்த மணப்பொடி. நிலை - இடம். மன் அட்ட மிக அழித்த, மன்னனை அழித்த. கடம் - காடு.

-

பிணம் பிறக்கி - பிணங்களை மலைபோல் குவித்து, வாள் வாய்த்து - வாளால் வெட்டுண்டு. பிறபெயர் - பிறர்

அன்று ஆபெயர்த்து வீழ்ந்தோன் கல்லுக்கு இன்று ஆன்வளம் குன்றாமல் செய்க. பீடம் - மேடை.

-

கோள் - கொள்கை. மா யானை. மடை கொளல் வேண்டும் - பண்ணிய படையல்களை ஏற்கவேண்டும். கல்லில் பீடும் பெயரும் எழுதுதல் வழக்காதலின் ‘எழுத்துடைக் கல்' என்றார்.

-

-

குழக்கன்று இளங்கன்று. உய்வித்தல் மீட்டிக் காத்தல். கோட்ட - வளைத்த.

கல் ஆட்டிய நீர் வான் நீரினும் தூய்து என்க. அதில் நீராடுதலே தீர்த்தம்.

-

நாகு - கன்று. நந்தி - பெருகி. போத்து - காளை. வாள் உழவர் - - - வீரர். அகன்று ஆர் சுரை - அகன்று விரிந்த மூங்கிற் குழாய். வட்டத் தயிர் - கட்டித்தயிர். அளை - வெண்ணெய். புறவு - காடு. கலித்த - தழைத்த. "வாள் உழவர் போத்தென வளஞ்சிறப்ப ஆவாழியர்” என்க.

நிவந்த

-

-

உயர்ந்தெழுந்த. வியல் அறை அகன்ற பாறை. அரிமான் பீடம் - சிம்மாசனம்., அஃதாவது அரியணை, திருவீழ் மார்பம் - திருமகள் விரும்பும் மார்பு. இகல் மாறுபாடு, பகை; துகள் - குற்றம். பொழில் - நாடு. உறந்தை உறையூர். ஆழி - சக்கரம்.

எரி எள்ளு வன நிறத்தன் - தீயை இகழ்வது போன்ற அழகிய நிறத்தினன். அகலம் - மார்பு. பொன்றார் எயில் - முப்புறம். காடு - சுடுகாடு. புறம் - முதுகு. குறங்கு - தொடை. சிரந்தை - துடி. இரட்டுதல் ஒலித்தல். இரண்டுரு அம்மையப் பனுரு. ஈரணி - ஆண், பெண் இருபால் அணி. களங்கனிமாறு ஏற்கும் களங்கனியும் தன் நிகரன்மையை ஏற்கும் நிறம். வலன் வென்றி. இப்பாடல் பதிற்றுப்பத்தின் கடவுள் வாழ்த்தாக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர் கூறுவர்.

-