உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

63

வளையாபதியை நினைத்தார் கவியழகு வேண்டி" (425) என்று குறிப்பிடுவதாலும் நன்கு அறியலாம்.

சிலப்பதிகார அரும்பத உரையாசிரியர், அடியார்க்கு நல்லார், இளம்பூரணர், நச்சினார்க்கினியர், யாப்பருங்கல விருத்தி யுரை யாசிரியர், பரிமேலழகர் ஆகிய பண்டை யுரையாசிரியர் பலரால் எடுத்தாளப்பட்ட அருமை வாய்ந்தது வளையாபதி.

புறத்திரட்டைத் தொகுத்த ஆசிரியர் காலம்வரை தமிழகத்தில் இந்நூல் உலாவந்த நீர்மையால் அதிலிருந்து 66 செய்யுட்களை எடுத்துச் செறித்து வைத்து அழகுசெய்ய அவரால் இயன்றது. மற்றை ரையாசிரியர்கள் வழியாகப் பெற்ற செய்யுட்கள் ஆறேயாம். ஆக இந்நாளில் வளையாபதிச் செய்யுட்களாக நாம் அறியக் கிடப்பன 72; கிடைக்கும் அளவிலேனும் போற்றிக் காத்தல் வேண்டும். என்னுங் கருத்தால் செந்தமிழ் இதழில் மூலத்தை மட்டும் வெளி யிட்டுள்ளார் மு. இராகவ ஐயங்கார். வளையாபதி, குண்டலகேசி என்னும் இரண்டு காவியங்களையும் இணைத்துப் பெருமழைப் புலவர் சோமசுந்தரனாரைக் கொண்டு விளக்கவுரை எழுதுவித்து அரிய பதிப்பாகக் கழகம் வெளியிட்டுள்ளது.

புறத்திரட்டில் இடம் பெற்றுள்ள வளையாபதிச் செய்யுட்கள் (66) அறுபத்தாறு. அவை வருமாறு.

25, 26, 78, 88, 89, 90, 91, 98, 130, 155, 156, 198, 199, 215, 256, 257, 264, 265, 266, 277, 278, 293, 294, 295, 296, 297, 309, 312, 313, 337, 351, 352, 353, 354, 355, 367, 396, 422, 423, 424, 438, 473, 837, 897, 925, 980, 981, 996, 1044, 1045, 1046, 1047, 1048, 1049, 1050, 1051, 1052, 1053, 1054, 1055, 1056, 1134, 1170, 1171, 1172, 1173.

மூலநூல் எதுவெனப் பெயர் விளங்காத பாடல்கள்

இப் புறத்திரட்டுத் தொகுப்பினுள் இடம் பெற்றள்ள பாடல்களில் (13) பதின்மூன்று பாடல்கள் எந்நூலைச் சேர்ந்தவை என்பது தெரியவில்லை. அவை வருமாறு:

838, 1355, 1356, 1357, 1358, 1387, 1408, 1409, 1410, 1439, 1455, 1475, 1495.