உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

இளங்குமரனார் தமிழ் வளம் 17

யாப்பருங்கலம், காரிகை இரண்டிற்குமே உரை செய்தவர் குணசாகரர் என்பர். இக் குணசாகரர் அமிதசாகரரின் ஆசிரியர் என்றுங் 1கூறுவர். “காரிகைக்கு உரை செய்தவரே குணசாகரர். யாப்பருங்கலத்திற்கு "விருத்தியுரையை எழுதியவர் பெருமான் பெயர் மகிழ்ந்த பேராசிரியர் என அவர் சிறப்பிக்கும் மயேச்சுர ருடைய மாணவரோ, அவ்ா பரம்பரையினரோ ஆதல் வேண்டும். என்றுங் கூறுவர்.

2

யாப்பருங்கல விருத்தியில் குறிக்கப் பெறும் ‘பல்லவ மன்னன்'; கலிமல்லன் என்பவன், 'நரசிம்ம பல்லவனாகிய மாமல்லனே’ என்பது ஆராய்ச்சியாளர் முடிவு. ஆதலால் அவன் வாழ்ந்த எட்டாம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டவரே இவ்வுரை யாசிரியர்

எனலாம்.

“சொல்லாற் சுருங்கிப் பொருள்பெருகி தொன் - ஞானம் எல்லாம் விளக்கி இருளகற்றும் - நல்யாப்

பருங்கலம் வல்லவர் தாமன்றே கேள்வி

ஒருங்கறிய வல்லார் உணர்ந்து

و,

என்னும் வெண்பாவால் யாப்பருங்கலச் சீர்மை விளங்கும்.

புறத்திரட்டில் கொள்ளப்பெற்ற யாப்பருங்கல மேற்கோட் பாடல்கள் (2) இரண்டு. அவை வருமாறு: 602,865.

31. வளையாபதி

ஐம்பெருங் காவியங்களுள் நான்காவது இடம் பெறுவது வளையாபதியாம். வளைந்து கொடுக்காது நிமிர்ந்த தலைவன் ஒருவனைப் பற்றிய வரலாற்றைக் கூறும் நூல் இஃதென்பர். இந்நூல் சமண சமயஞ் சார்ந்தது என்பதை இதன் கடவுள் வாழ்த்துப் பாக்களால் எளிதில் உணரலாம்.

வளையாபதிச் செய்யுள் ஆற்றொழுக்கான ஓட்டமும் அழகும் அமைந்தது; சந்த வின்பம் மல்கியது. கிடைத்துள்ள பாடல்களால் இதனை நாம் அறிவதுடன், ஒட்டக்கூத்தரால் இயற்றப்பெற்ற தக்கயாகப் பரணியின் உரையாசிரியர் "இவர் (ஒட்டக்கூத்தர்) 1. உரையாசிரியர்கள். பக். 486. 2. தென்றலிலே தேன்மொழி. பக். 59-60.