உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

61

காலம் கி.பி. 1382 ஆதலால் வாமனர் 14ஆம் நூற்றாண்டினர் என்பது தெளிவாம்.

மேருமந்தர புராணம் வீடூர் அப்பாசாமி சாத்திரியார் இயற்றிய உரையுடன் அ. சக்கரவர்த்திநயினார் அவர்களால் பதிப்பிக்கப் பெற்றுள்ளது.

புறத்திரட்டில் இடம் பெற்றுள்ள மேருமந்தர புராணப் பாடல் 1: 397.

30. யாப்பருங்கலம்

யாப்பிலக்கணம் கற்க விழைவார் இன்று பெரிதும் பயில்வன யாப்பருங்கலமும் யாப்பருங்கலக் காரிகையுமாம். இவ்விரண்டையும் இயற்றிய ஆசிரியர் அமிதசாகரரே ஆவர். முதற்கண் யாப்பருங்கலத்தை இயற்றி அதன் சுருக்கமாக 'யாப்பருங்கலக் காரிகையை இயற்றினார் என்பர்.

சமணர் வழிமுறையில் ‘அருங்கலம்' என்பது ஒன்று எனவும், அவ்வழிமுறையினர் தீபங் குடியில் வாழ்ந்தனர் எனவும், அவ்வழி முறையில் வந்தவர் ‘அமித சாகரர்’ எனவும், தம் குடிப்பெயரை நூற்கு இட்டனர் எனவும் கல்வெட்டறிஞர் கோபிநாதராவ் கூறுவார்.

நூலாசிரியர் பெயர் ‘அமுதசாகரர்' என்றும் பதிப்பாசிரியர் சிலரால் குறிக்கப் பெற்றார். ஆனால் "அளப்பருங் கடற் பெயர் அருந்தவத்தோனே” என்னும் யாப்பருங்கலப் பாயிரச் செய்யுளால், அமிதசாகரர் என்பது உறுதியாம். (அளப்பருங் கடல் அமித சாகரம்; அதன் பெயருடையவர் அமித சாகரர்)

யாப்பருங்கல உரையே முன்னையது என்பது "வெண்பாவி னோடும் ஆசிரியத்தினோடு வந்த மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா யாப்பருங்கல விருத்தியுரையுள் 'காமர் கடும் புனல்' என்னும் பழம்பாட்டில் கண்டு கொள்க” என்று காரிகையுரை குறித்துச் செல்வதால் புலப்படும்.

1. "யாப்பருங்கலம் என்னும் யாப்பிற்கு அங்கமாய் அலங்காரம் உடைத்தாகச் செய்யப்பட்டமையால் யாப்பருங்கலக் காரிகை என்னும் பெயர்த்து” - காரிகை உரை. 1.