உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

இளங்குமரனார் தமிழ் வளம் 17

1394, 1395, 1396, 1397, 1398, 1431, 1432, 1433, 1434, 1457, 1458, 1465, 1466, 1467, 1468, 1469, 1470, 1471, 1472, 1473, 1474.

29. மேருமந்தர புராணம்

வாமன முனிவர் என்பவரால் இயற்றப்பெற்ற ஒரு நூல் மேருமந்தர புராணம் ஆகும். புராணமாவது பழங்கதை. சமண் சமயச் சான்றோர் செய்து புராணப் பெயரால் நிலவுவனவற்றுள் முதலாவது இதுவே என்பர்.

இருபத்து நான்கு தீர்த்தங்கரர்களுள் பதின்மூன்றாமவரான விமல தீர்த்தங்கரருடைய கணங்களுள் மேரு, மந்தரர் என்னும் இருவரின் வரலாறுகளை விரித்துரைப்பதாகலின் இப் பெயர் பெற்றது என்பர்.

வாமன முனிவர் காஞ்சிபுரத்தை அடுத்த திருப்பருத்திக் குன்றம் என்னும் ஊரினர். வடமொழி, பாகதமொழி ஆயவற்றிலும் தேர்ந்தவர். மல்லிசேனர் என்னும் பெயரும் இவருக்குண்டு. இவ்வாமன முனிவரே நீலகேசிக்கு உரை கண்டவராவர்.

சிம்ம சந்திரன், பூரண சந்திரன் என்னும் உடன்பிறந்தாரிருவர், கெட்ட அமைச்சன் ஒருவன் வயப்பட்டுத் தீங்கிழைக்கப் பெற்றுப் பலபிறப்புக்கள் எடுத்துத் தவங்கிடந்து முத்தி பெற்றதும், அமைச்சன் நரகுற்றதும் ஆகிய வரலாறு இதன்கண் கூறப்பெற்றுள்ளது. இதன்கண் 12 சருக்கங்களும் 1406 பாடல்களும் உள.

66

‘ஆயிரத்து நானூற்றின் மேலும் இருமூன்றாம் பாயபுகழ் மேருக்கள் மந்தரர்பால் - தூய தவராச ராசன் குறுமுனிவன் தந்த

பவரோக மந்திரமாம் பாட்டு”

என்னும் வெண்பாவால் இந்நூற் பாடல்களின் அளவை அறியலாம்.

படைத்தலைவன் இருசப்பன் என்பான் தன் குருவான புட்ப சேனர் கட்டளைப்படி காஞ்சிச் சினாலயத்தில் சில திருப்பணிகள் செய்தமையைக் கல்வெட்டுக்களால் அறிகிறோம். புட்பசேனர் என்பார் வாமனர் மாணவர். ஆகவே வாமனர், இருசப்பன் காலத்தை ஒட்டியே இருந்திருத்தல் வேண்டும். கல்வெட்டின்