உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

59

படைத்துக்கொண்ட நூல்வகையைச் சார்ந்தது இஃது என்பது

தெளிவாம்.

நாடு, நகர், பகைப்புலம் பழித்தல், திறை, எயில் கோடல், குதிரை மறம், யானைமறம், களம், வென்றி, புகழ் முதலாய பல்வேறு தலைப்புக்களில் பாடல்கள் பாடப்பெற்று இருப்பினும் கைக்கிளைப் பாடல்களே மிகுதி என்பது,

66

“அங்கதப் பாட்டவற் றளவோ டொக்கும்”

என்னும் நூற்பாவிற் பேராசிரியர் “கைக்கிளைச் செய்யுள் முதத் தொள்ளாயிரத்தில் பலவாயினும்" என்று குறிப்பதால் புலப்படும்.

66

"மன்னிய நாண்மீன்” எனத் தொடங்கும் கடவுள் வாழ்த்தானும், ங்கா மயிலூர்தி” “செங்கண் நெடியான்” என்னும் பாக்களாலும் முத்தொள்ளாயிர ஆசிரியர் சைவ சமயத்தவர் என்பது வெளிப்படும்.

LOL

நம்மாழ்வார், பெரியாழ்வார் வாக்குகளில் முத்தொள்ளாயிரச் சொற்றொடர்கள் இடம் பெற்றிருத்தலாலும், முன்றுறையரை யனார் பழமொழி யொன்றை, இது கையாண்டிருத்தலாலும், இவர்கட்கு டைப்பட்ட காலத்ததாக - அஃதாவது ஐந்தாம் நூற்றாண்டுக்கும் எட்டாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்த தாக முத்தொள்ளாயிரத்தின் காலத்தை 'ஆராய்வாளர் கருதுவர்.

-

முத்தொள்ளாயிரம் என்னும் தெள்ளு தமிழ்ப் பாடல்கள் 108 வழங்கிய பெருமை புறத்திரட்டையே சாரும். ஒரே ஒரு பாடல் இளம்பூரணர் உரையால் கொள்ளப் பெற்றது. முத்தொள்ளாயிரப் பாடல்களைத் திரட்டிச் செந்தமிழ் வாயிலாக வழங்கியவர் அறிஞர் மு. இராகவ ஐயங்காராவர்.

புறத்திரட்டில்

அறத்துப்பால்

2

பொருட்பால்

ஆகிய

இரண்டிலும் இடம் பெற்றுள்ள முத்தொள்ளாயிரப் பாடல்கள் (44) நாற்பத்து நான்கு. அவை வருமாறு:

1, 829, 830, 831, 862, 863, 864, 1278, 1279, 1280, 1281, 1282, 1285, 1286, 1287, 1288, 1331, 1381, 1389, 1390, 1391, 1392, 1393,

1. தமிழ் இலக்கிய வரலாறு. 250-600. பக். 87.

2. இன்பப் பகுதியான முத்தொள்ளாயிரப் பாடல்கள் ஈண்டு விலக்கப் பெற்றன. அவை வெளிவரவிருக்கும் அகத்திரட்டில் இடம் பெறும்.