உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

இளங்குமரனார் தமிழ் வளம் 17

அகப்பொருள், புறப்பொருள்களில் ஒரு பொருள் பற்றிக் கூறி யிருக்குமாயின் நம்பி யகப்பொருள், இறையனார் களவியல், புறப்பொருள் வெண்பாமாலை என்பன போலப் பொருளுக்கு முன்னடை பெற்றிருக்கக் கூடும் என்பது ஒரு தலை.

புறத்திரட்டிலுள்ள பெரும்பொருள் விளக்கப் பாடல் எண்கள்

(41) நாற்பத்தொன்று. அவை வருமாறு:

228, 542, 1159, 1160, 1161, 1236, 1237, 1238, 1239, 1240, 1245, 1246, 1247, 1248, 1249, 1250, 1255, 1256, 1271, 1272, 1273, 1325, 1326, 1327, 1328, 1329, 1330, 1337, 1338, 1340, 1341, 1348, 1349, 1350, 1363, 1399, 1400, 1401, 1430, 1501.

28. முத்தொள்ளாயிரம்

முத்தொள்ளாயிரமாவது மூன்று தொள்ளாயிரமாகிய ஈராயிரத் தெழுநூறு என்னும் எண்ணைக் குறித்து, அவ் எண்ணிக்கை அமைந்த பாடல்களைக் கொண்ட நூலுக்குப் பெயராயிற்றாம். சேர, சோழ, பாண்டியர் என்னும் முடியுடை வேந்தர் மூவரையும் தனித்தனியே தொள்ளாயிரம் வெண்பாப் பாடல்களால் பாடப் பெற்ற நூல் இஃதாம்.

166

நடுவெண் பாட்டே” என்னும் நூற்பாவின் உரையில் "பதினெண் கீழ்க் கணக்கினுள்ளும் முத்தொள்ளாயிரத்துள்ளும் ஆறடியின் ஏறாமல் செய்யுள் செய்தார் பிற சான்றோரும்” என்று பேராசிரியர் கூறியுள்ளமையால் சங்கச் சான்றோர்க்குப் பின்னர் இருந்தவர் முத்தொள்ளாயிர ஆசிரியர் என்பதும் அவர் பாடிய வெண்பாக்கள் ஆறடியின் ஏறாதவை என்பதும் புலப்படும். இந்நூற்பாவின் உரையில் ஆசிரியர் நச்சினார்க்கினியர், “முத்தொள்ளாயிரத்து நான் கடியே மிக வந்தவாறும் காண்க” என்பது முத்தொள்ளாயிரத்தின் அடியளவை வலியுறுத்தும் மற்றொரு சான்றாம்.

புதிதாகத் தொடுக்கப்படும் தொடர்நிலை மேற்றாகிய 2விருந்து என்பதற்கு இம் முத்தொள்ளாயிரத்தைப் பேராசிரியர் நச்சினார்க்கினியரும் எடுத்துக் காட்டுவதால் பழையதும் புதியதும் ஆகிய கதைமேலன்றிப் புதிதாக ஒருவர் தாம் விரும்பியவாறு 1. தொல். செய். 158. 2. தொல். செய். 239.