உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

57

பாடலொன்றனையே அவ்வாறு பயன்படுத்தி யுள்ளமையால் இதனைக் கருதவேண்டியதாயிற்று என்க.

புறத்திரட்டில் ஆளப்பெற்றுள்ள இந் நூற் பாடல்கள் (75) எழுபத்தைந்து அவை வருமாறு:

72, 73, 93, 102, 276, 374, 421, 431, 432, 479, 480, 541, 562, 563, 564, 607, 699, 768, 828, 899, 900, 901, 1116, 1151, 1152, 1153, 1154, 1155, 1156, 1232, 1233, 1234, 1235, 1243, 1244, 1252, 1253, 1254, 1261, 1262, 1263, 1264, 1265, 1266, 1268, 1269, 1270, 1276, 1277, 1289, 1290, 1295, 1296, 1300, 1307, 1308, 1309, 1310, 1322, 1323, 1324, 1335, 1336, 1345, 1346, 1360, 1361, 1362, 1379, 1380, 1388, 1436, 1437, 1456, 1500.

27. பெரும்பொருள் விளக்கம்

'பெரும் பொருள்', பொருளிலக்கணம் கூறும் ஒரு நூலென நச்சினார்க்கினியர் வாக்கால் அறியக் கிடக்கிறது.

“பின்னர் நான்கும் பெருந்திணை பெறுமே என்பதனால், ஒப்பும் பெருந்திணைப் பாற்படுங் கந்தர்வமாமாறு பெரும் பொருளான் உணர்க” (சிந்தாமணி 187) என்பார். இதனால் பெரும்பொருள் என்பது ஒரு பொருள் இலக்கண நூல் என்று உணர்கின்றோம். அதற்கு விளக்கமாய் அமைந்த நூலே பெரும்பொருள் விளக்க மாகக் கூடும் என்று உய்த்துணரத் தக்கதாக உள்ளது. இந்நூலில் இருந்து புறத்திரட்டில் காட்டப்பெற்றுள்ள பாடல்கள் நாற்பத் தொன்று. அத்துணையும் புறப்பொருள் பற்றியனவாகவே உள. அதனைக் கருத்திற்கொண்டு புறப்பொருள் பற்றிய நூலாக இருத்தல் வேண்டுமெனப் பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை அவர்கள் கருதுவார்கள். ஆனால் புறத்திரட்டு நூல் அறம், பொருள் என்னும் இரண்டு பால்களுடன் நிறைவடைவதாலும், காமத்துப்பால் என்ற பகுதி புறத்திரட்டுச் சுருக்கத்திலேயே இடம் பெற்றிருத்தலாலும் பெரும் பொருள் விளக்கத்தில் அமைந்து கிடந்த அகப்பொருட் பாடல்கள் இடம் பெறாமல் போயின வாகலாம் எனக் கருது மாறுளது. ஆகத் தகவுடைய சான்று கிட்டும் வரை அகப்பொருள் புறப்பொருளாகிய இரண்டுங் கூடிய பொருளிலக்கண நூலே பெரும் பொருள் என்பது தகும்.