உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

இளங்குமரனார் தமிழ் வளம் 17

பாடுதலால் வெளிப்படும். கொற்றவை, மாயோன், சேயோன் ஆகியோரையும் இடை இடையே புறப்பொருள் அமைதிக் கேற்பக் கூறிச் செல்லும் பாடல்களால் இவர் தம் சமயச் சால்பு நன்கு வெளிப்படுகின்றது.

வெட்சி முதலாகப் பெருந்திணை ஈறாகப் பன்னிரு படலங் களையும் ஒழிபு' என்னும் ஒரு பகுதியையும் கொண்டது புறப் பொருள் வெண்பாமாலை. இதனைப் பண்டையுரை யாசிரியர்கள் வெண்பாமாலை என்று வழங்கினர். புறத்திரட்டு ஆசிரியரும் 'வெண்பாமாலை' என்றே குறித்தார். இதற்குப் பழைய உரை ஒன்று உண்டு. அவ்வுரை “சயங்கொண்ட சோழ மண்டலத்து மேற்கானாட்டு மாகறலூர் கிழார் சாமுண்டி தேவ நாயகர்” என்பவரால் இயற்றப் பெற்றது. இதனை 1895இல் முதற்கண் வெளியிட்ட பெருமை டாக்டர் ஐயரவர்கட்கு உண்டு. பின்னர்ச் சிறந்த விளக்கத்துடன் கழக வழி வெளிவந்துள்ளது.

ஒரு விளக்கம் :

உரை

“கான்படு தீயில்” என்னும் புறப்பொருள் வெண்பாமாலைப் பாடலொன்று (55) தொகுப்பாசிரியரால் படைச்செருக்கிலும் (1310) தானைமறத்திலும் (1362) சேர்க்கப்பெற்றுளது. இவ்வாறு இரண்டு அதிகாரங்களில் இடம் பெற்றுள்ள பாடல் இஃதொன்றே யாம். இப்பாடல் படைச்செருக்கு, தானைமறம் ஆகிய ஈரதிகாரங் கட்கும் ஏற்ற எடுத்துக் காட்டாக இலங்குதலால் அவ்வாறு இணைக்கப்பெற்றது போலும்!

66

“காட்டில் தோன்றிய தீப்போல் தன்மேல் பகைவர் மீதூர்ந்து வந்த விடத்தும் அப்பகைவர் தன்னோடே போர் செய்து தன்னைக் கோறல் அல்லது வானுலகஞ் சேறல் என்னும் ஒன்றைத் துணிந்த பின் அன்றித் தன்படை தீண்டாத் தறுகண்மையுடையான்” என்று வருவது குறித்துப் படைச்செருக்கில் வைத்தார் என்றும், அத்தகைய வீரன், "தன் பகைவர் முதுகிட்டோட எண்ணிய பின்பு தன் வாளினை அவர் மேல் ஓங்குவனோ" என்று வருவது குறித்துத் தானை மறத்தில் வைத்தார் என்றும் கருதலாம். இவ்வாறே வேறு சில பாடல்களும் ஒன்றற்கு மேற்பட்ட அதிகாரங்களில் சேர்த்தற்கு ஏற்ற பொருளமைதி யுடையனவாயினும், தொகுப்பாசிரியர் இப்