உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

26. புறப்பொருள் வெண்பாமாலை

55

தமிழ் இலக்கணம் ஐந்தினுள் பொருள் இலக்கணத்தின் பகுதியாகிய அகம், புறம் என்னும் இரண்டில் புறப்பொருளுக்கு இலக்கியமான வெண்பாக்களின் வரிசையை யுடைய தாகலின் 'புறப்பொருள் வெண்பாமாலை' எனப் பெயர் பெற்றது.

புறத்தின் இலக்கணமான 342 நூற்பாக்களையும் அவற்றுக்கு இலக்கியமான 361, வெண்பாக்களையும் தன்னகத்துக் கொண்டு பல்வகை நயங்களும் பல்க அமைந்த நூல் புறப்பொருள் வெண்பா மாலை (ஒழிபியலில் உள்ள 19 வெண்பாக்களுக்கு முன் மட்டும் நூற்பாக்கள் இல்லை).

புறப்பொருள் வெண்பாமாலையை இயற்றிய ஆசிரியர் ஐயனாரிதனார் என்னும் பெயருடைய சேர அரசர் என்பதும், அவர் பன்னிருபடலம் என்னும் நூலை முதனூலாகக் கொண்டு வழிநூலாக இதனைச் செய்தார் என்பதும்

66

மன்னிய சிறப்பின் வானோர் வேண்டத் தென்மலை இருந்த சீர்சான் முனிவரன் தன்பாற் றண்டமிழ் தாவின் றுணர்ந்த துன்னருஞ் சீர்த்தித் தொல்காப் பியன்முதற் பன்னிரு புலவரும் பாங்குறப் பகர்ந்த பன்னிரு படலமும் பழிப்பின் றுணர்ந்தோன் ஓங்கிய சிறப்பின் உலகமுழு தாண்ட வாங்குவிற் றடக்கை வானவர் மருமான் ஐய னாரித னகலிடத் தவர்க்கு

மையறு புறப்பொருள் வழாலின்று விளங்க வெண்பமாலை யெனப்பெயர் நிறீஇப்

பண்புற மொழிந்தனன் பான்மையிற் றெரிந்தே”

என்னும் பாயிரச் செய்யுளால் நன்கு விளங்கும். இவர் காலம் எட்டாம் நூற்றாண்டுக்கு முன்னது என்பார் தமிழ் வரலாற்றின் ஆசிரியர் தஞ்சை சீனிவாச பிள்ளை.

இவர் சைவ சமயஞ் சார்ந்தவர் என்பது ஆனைமுகத்தானையும், நீலமிடற்றானையும் நினைந்து கைகூப்புவதாகக் கடவுள் வாழ்த்துப்