உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

இளங்குமரனார் தமிழ் வளம் 17

கொள்ளுதற்கு வாய்த்த வரலாற்றுப் பொற்பேழை ‘புறநானூறு' என்பது மிகையன்று.

இப்பாக்களைப் பாடியவர்கள் பாடப்பட்டவர்கள் அனை வரும் ஒரு காலத்தார் அல்லர்; ஓரிடத்தார் அல்லர்; ஓரினத்தார் அல்லர்; ஒரு தொழிலார் அல்லர்; தமிழ் மன்பதை பாடியது! தமிழ் மன்பதை பாடப்பெற்றது! 1800 யாண்டுகட்கு முற்பட்ட தமிழகத்தைக் காட்டும் அழியாக் காட்சிக் கூடம் புறநானூறு என்பது தகும்.

புறத்துறை இலக்கண நெறிக்கு ஏற்ப ஒவ்வொரு பாடற்கும் திணையும் துறையும் வகுக்கப் பெற்றுள்ளது. ஒவ்வொரு பாடலும், பாடினோர் பாடப் பெற்றோரைக் குறித்துச் செல்லுகிறது. இயன்ற இடங்களிலெல்லாம் பாடல் தோன்றிய சூழலைச் சுட்டிச் செல்லு கிறது. அரிய உரை கொண்டு திகழ்கிறது. அதற்கு முன்னேயும் ஓருரை இருந்திருக்கக் கூடும் என்பது அவ்வுரையால் புலப்படுகிறது.

தமிழர் தலைமேல் வைத்துப் போற்றத்தக்க இப்பெரு நூலை 1894ஆம் ஆண்டு முதற்கண் வெளியிட்ட பெருமை டாக்டர் ஐயருக்குண்டு. 269ஆம் பாடலுக்கு மேல் உரையில்லா திருந்த குறையை நிறை செய்த பெருமை கழகத்திற்குண்டு. இந்நூலின் 267, 268ஆம் பாடல்களை இழந்து விட்ட குறை தமிழுலகத்திற்கு உண்டு!

புறத்திரட்டில் இடம் பெற்றுள்ள இந்நூற் பாடல்கள் (104) நூற்று நான்கு. அவை வருமாறு:

8, 48, 67, 99, 115, 230, 281, 282, 368, 401, 427, 443, 444, 497, 498, 499, 514, 568, 569, 570, 571, 572, 672, 684, 700, 780, 781, 782, 783, 784, 926, 1126, 1127, 1135, 1179, 1180, 1259, 1284, 1293, 1294, 1297, 1298, 1299, 1305, 1306, 1359, 1364, 1365, 1366, 1367, 1368, 1384, 1385, 1386, 1411, 1412, 1413, 1414, 1415, 1416, 1417, 1418, 1443, 1444, 1445, 1446, 1447, 1448, 1449, 1450, 1451, 1452, 1453, 1459, 1460, 1461, 1462, 1463, 1464, 1477, 1478, 1479, 1480, 1481, 1482, 1483, 1484, 1485, 1486, 1487, 1488, 1489, 1490, 1491, 1494, 1495, 1496, 1497, 1498, 1499, 1502, 1503, 1504, 1505.