உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திரட்டு

53

இனிப், பதின்மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த 1அருணிலை விசாகன் என்பான், பாரதத்தை இனிய செந்தமிழ்ப் படுத்தியவன் என்று திருவாலங்காட்டுச் சாசனத்தால் புகழப்படு கின்றான். ஆக, வேறொரு பாரத நூல் இஃதென அறியலாம்.

பாரத வெண்பாப் பாடிய பெருந்தேவனார் ஒன்பதாம் நூற்றாண்டின் இரண்டாம் பகுதியைச் சேர்ந்தவர் என 2 முடிவு கட்டுகிறார் அறிஞர்து.அ. கோபிநாதராவ்.

புறத்திரட்டில் ஆளப் பெற்றுள்ள பாரதப் பாடல்கள் (33) முப்பத்து மூன்று அவை வருமாறு:

38, 77, 84, 104, 108, 169, 196, 197, 252, 263, 326, 329, 330, 394, 613, 614, 688, 689, 690, 765, 770, 771, 772, 773, 774, 775, 1072, 1073, 1074, 1148, 1311, 1347, 1429.

25. புறநானூறு

அறமும் பொருளும் பற்றிப் புறத்தே நிகழும் ஒழுக்கம் புறம் எனப்படும். அப்புறப் பொருள் பற்றிய நானூறு பாக்களால் அமைந்த சங்க நூல் புறநானூறு ஆகும். இது புறப்பாட்டு, புறம், புறம்பு நானூறு என்னும் பெயர்களாலும் வழங்கப்பெறும். எட்டுத்தொகை நூல்களுள் இஃது எட்டாவதாம்.

முழுமுதல் இலக்கண நூலான தொல்காப்யித்திற்கு முற்பட்ட பாடல்களும் இந்நூற்கண் உள. சங்கத் திறுதிக் காலச் செய்யுட்களும் இடம் பெற்றுள. பாரதம் பாடிய பெருந்தேவனார் முதல் கோவூர் கிழார் ஈறாகப் பல புலவர் பெருமக்களால் பாடப்பெற்ற பாக்களை யுடையது. 159 புலவர்களால் பாடப்பெற்றது என்பார் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள். ஆனால் அவ்வாறு வரையறுத்துக் கூறுதற்குப் பல்வேறு இடர்ப்பாடுகள் உண்மை எவரும் அறிந்ததே.

3

முடிவேந்தர் மூவர், குறுநில மன்னர், வள்ளல்கள், தானைத்

தலைவர்கள்,

புலவர் பெருமக்கள் ஆகியோரை அறிந்து

1. அறநிலை விசாகன் என்பார் அறிஞர் சதாசிவ பண்டாரத்தார்.

2. செந்தமிழ் - தொகுதி 5, 60-64.

3. தமிழ் இலக்கிய அகராதி.