உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

இளங்குமரனார் தமிழ் வளம் 17

1101, 1102, 1103, 1104, 1105, 1106, 1107, 1108, 1109, 1117, 1118, 1119, 1128, 1129, 1136, 1137, 1138, 1139, 1140, 1149, 1162, 1175, 1176, 1190, 1191, 1192, 1193, 1194, 1195, 1196, 1197, 1312, 1313.

24. பாரதம்

பாண்டவர்துரியோதனர் வரலாறு கூறும் இந்நூல் வியாசரால் வடமொழியில் இயற்றப் பெற்றது. பரதன் வழி வந்த மக்கள் வரலாற்றைக் கூறும் நூல் ஆதலின் இப்பெயர் பெற்ற தென்பர். வில்லிபுத்தூராழ்வார், நல்லாப்பிள்ளை ஆகியோர் இயற்றிய பாரதங்கள் தமிழில் உள. இவற்றுக்கு முன்னரும் தமிழில் பாரத நூல்கள் பல இருந்தன.

பாரதம் பாடிய பெருந்தேவனார் என்னும் ஒருவர் மிகப் பழைமையானவர். எட்டுத்தொகை நூல்களுள் பலவற்றின் கடவுள் வாழ்த்துக்கள் அவருடையனவே. அவர் பாரதம் பாடிய காரணத் தால் இப்பெயர் பெற்றார் என்பதும் வெளிப்படை.

66

மகாபாரதம் தமிழ்ப்படுத்தும், மதுராபுரிச் சங்கம் வைத்தும்’ உதவினான் பாண்டியன் ஒருவன் எனச் சின்ன மனூர்ச் செப்பேடுகள் கூறுகின்றன. ஆசிரியர் நச்சினார்க்கினியரால் தொல்காப்பிய உரைக்கண் மேற்கோளாகப் பாரதச் செய்திகளை உள்ளடக்கிய சில பாடல்கள் காட்டப்பெறுகின்றன. அவை நடைப்போக்கால் சங்கச் செய்யுட்களை நினைவூட்டுகின்றன. சங்க நூல்கட்குக் கடவுள் வாழ்த்துப் பாடிய பெருந்தேவனாரே இப்பாரதச் செய்யுட்களை இயற்றியிருக்கக் கூடும் எனக் கொள்ளலாம்.

இனி ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த நந்தி வர்மப் பல்லவன்' காலத்தேயும் ஒரு பெருந்தேவனார் இருந்துள்ளார். அவரும் பாரதம் பாடியமையால் பாரதம் பாடிய பெருந்தேவனார் என்றே அழைக்கப் பெற்றார். ஆனால் இவர் பாடிய நூல் ‘பாரத வெண்பா' என அழைக்கப்படுகிறது. சங்க காலப் பெருந்தேவனார் பாரதம் ஆசிரியப் பாவான் இயன்றது என்பது கிட்டியுள்ள பாடல்களால் புலனாகின்றது. புறத்திரட்டில் சேர்க்கப் பெற்றுள்ள பாரதப் பாடல்கள் பாரத வெண்பாவைச் சேர்ந்தனவாம். இந்நூலிற் கிடைத்துள்ள 830 பாடல்களையும் அ. கோபாலையர் வெளி யிட்டுள்ளார்.