உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

இளங்குமரனார் தமிழ்வளம்

18

நல்லோர் செல்வம் தீமை புரியாதா? புரியாது! புரியுமாயின் அவர் நல்லவர் ஆகார்.

தீயோர் செல்வம் நன்மை புரியாதா? புரியாது, புரியுமாயின் அவர் தீயவர் ஆகார்.

நல்லவர் தீயவர் என்பதை அளந்து காட்டும் 'கோல்’. அவர் செல்வப் பயன்பாடே ஆம்- ‘தத்தம் கருமமே கட்டளைக்கல்’

-

தீயவர் செல்வம் எய்தினால் எய்தும் கேடென்ன! நல்லவர் வறுமை உற்றால் இழப்பென்ன? அவரவர் வாழ்வு தாழ்வு அவரவரோடு அன்றே உலகுக்கு வருவது என்ன? மன்பதைப் பொதுமை, ஒருமைப்பாடு மக்கட் சமனிலை வாழ்வு என்று நாள்தோறும் அறிந்தோ அறியாமலோ, உள்ளம் ஒன்றியோ ஒன்றாமலோ உரையாடியும் எழுதியும் வரும் இற்றை உலகில் உலகம் - குடும்பம் என்னும் அளவில் சுருங்கி விட்ட அறிவியற் கால நிலையில் இக்கேள்விகள் எழா!

-

தீயவர் செல்வஞ் செய்யும் கேட்டை விரித்துரைக்க வேண்டா, உவமை ஒன்று போதும்

66

குறும்பு செய்தலில் பெயர் பெற்றது குரங்கு, அக்குரங்கை நண்டு கடித்துவிட்டது. பின்னர் தேளும் தொடுத்துக்கொட்டியது. இரண்டு கடியும் பட்டுத் தடுமாறிய குரங்கு மதுக்குடம் ஒன்றைக் கண்டு நீரெனப் பருகியது. இந்நிலைமையில் வெறிப்பேய் ஒன்றும் ஏறிக் கொண்டது. தாவிச் செல்லுங்கால் காஞ்சொறிப் பொடி பரவிவந்து படிந்தது; இஞ்சியும் தின்றது. குரங்கின் குறும்பு எப்படி ஏறும்! (இந்நாட்பொருள் விலைபோல் ஏறாதா?) இக்குரங்கின் கையில் கொள்ளிக் கட்டை சிக்கினால்? குறும்புக் கொடுமையைக் குறிக்க இயலுமா? இத்தகைய கொடுமை செய்யுமாம் பல்லியர் பெற்ற செல்வம், அல்லது கொடுமை செய்வராம் செல்வம் பெற்ற புல்லியர்.

தத்துவப் பிரகாசர் பாடுகிறார்:

66

குரங்குமாய் நண்டுகட்டித் தேளுங் கொட்டிக்

குடியாத மதுக்குடித்துப் பேயும் ஏறி

இரங்கவரும் காஞ்சொறியின் பொடியும் தூவி

இஞ்சிதின்று கொள்ளிபிடித் தெழுத்தாற் போலத்