உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-

வாழ்வியல் வளம்

85

-

நாளைக்கு என் செய்வோம் என்று நலிபவன் கூட நிறைத்த நஞ்சத்தவனாக வறுமைக்கு வறுமை செய்பவனாக இருப்பானே யானால் அவன் செல்வன் - வறுமைச் செல்வன் ஆவன்.

-

ஓடி,ஓடி,ஓடி - தேடித் தேடித் தேடி பிறரை வலிந்து வாட்டி வருத்திக் கோடி கோடி கோடியாகக் குவித்து வைத்து இருப்பவன் கூட “இது என்ன செல்வம்! போதாதே! இன்னும் போதாதே! என்று ஏங்குவான் என்றால் அவன் வறியன் செல்வறியன் - ஆவன்

-

-

இதனைச் 'செல்வம் என்பது சிந்தயிைன் நிறைவே’ என்றும் ‘வறுமை போகம் துய்க்கப் பெறாத பற்றுள்ளம் என்றும் தமிழ்ச் சான்றோர் தக்க வகையில் கூறுவர், அழுகைச் சுவைக்குரியது வறுமை (தொல் - பொருள்.(233) உவகைச் சுவைக்குரியது செல்வம்! (தொல் - பொருள்259) இச்சுவை நிலைக்களத்தையே மாற்றியமைத்துச் சால்புற வாழ்வார் என்றால், அச்சான்றோர் எத்தகையர்! அவரே பெரியர் செயற்கரிய செய்வார் பெரியர்' என்பது அறத்தின் முழக்கம்.

னிச் சிந்தையின் நிறைவளம் செல்வம் இருக்கட்டும்! பற்றுள்ளமாம் வறுமையும் ஒரு புறம் இருக்கட்டும்! உலகியற் செல்வக் கூத்து எத்தனை? அச்செல்வக் கூத்தர் எத்தகையர்? எண்ணப் பொழுது போதா, எழுதப் பொழுதும் போதா! அத்துணைக் கூத்துக்கள் உள. பொருளுக்கென அறம் மறம் எனத் தன்மை உண்டா? இல்லை? பொருள் உடையான் தன்மை பொருள் மேல் ஏறி இருந்து இயக்குகின்றது. அவன் நல்லவன் ஆயின் அவன் பொருள்கள் நல்ல; அவன் தீயன் ஆயின் அவன் பொருள்கள் தீய. ஆட்டக்காய் யாது செய்யும்? ஆடுவோன் கருத்துக்கு ஏற்ப நகரும். வெல்லும் தோற்கும்! பொருள் பயன் படுபவது பொருளுடைய உள்ளம் உடையவனிடத்தே தான் பிறனிடம் இருப்பின் பொருளுக்கும் கேடு பொருள் உடையானுக்குக் கேடு - இப்பேருலகுக்கோ பெருங்கேடு.

-

நல்லோர் செல்வம் ஊருணியாய், நடுவூர்ப் பழமரமாய் நன்மருந்தாய்ப் பயன்படும். அல்லோர் செல்வம் தடியடியாய், பொய் வழக்காய் நச்சுக்காற்றாய் அணு குண்டாய் பேயுருக் கொண்டு நிற்கும். இவை பொருளின் குறை நிறைகளா? பொருளுடையான் குறை நிறைகளா?

-