உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

இளங்குமரனார் தமிழ்வளம்

18

கண்டு கொண்டது நாடு. ஆனால், மானத்தின் சட்டம் - ஆணிவேர் - அது எனக்கொண்டு நடை முறைக்குக் கொண்டு வரவில்லை; கொண்டுவராத அளவும் ஆன்றோர் உரைமணிகள் இலக்கியமாக இருக்குமே ஒழிய, வாழ்வாக மலர முடியாது.

66

இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின் கரப்பார் இரவன்மின் என்று”

“இரவலர்களையெல்லாம் யான் இரந்து ஒன்று வேண்டு கின்றேன்; நீங்கள் ஒருவரிடம் போய் ஒன்றை இரப்பீர்கள். ஆனால் அவர்கள் அதைக் கொடாமல் மறைத்து விடுகிறார்கள். ஆதலால் எந்த ஒன்றையும் எவரிடமும் எப்பொழுதேனும் இரக்க வேண்டா.

செல்வக் குன்றம் ஒருபால்; வறுமைப் பள்ளம் ஒரு பால்- இவை இன்றைய நேரிடைக் காட்சி மட்டுமன்று, பழைமைக் காட்சியும்தாம். சீரிய செல்வச் செழிப்பினைச் செவ்வையுற எடுத்துக் காட்டும் இலக்கியங்களில் இடையே வன்கொடுமை வறுமைக்காட்சி தலை காட்டாமல் இல்லை. வள வாழ்வு மாளிகைக்கு அருகிலேயே கழிவு உணவுகளைத் தின்று வயிற்றை நிரப்பி வளரும் நாய், உணவின்றித் துவளும் வறுங்குடிசை ருப்பதைக் காண்கிறோம். முன்றிலில் காய வைத்த நெல்லைக் கொத்தித் தின்னவரும் கோழியைக் குழை (காதணி) கொண்டு வருட்டும் செல்வச் சிறுமியர் வாழும் தெருவகத்தே புன் கொடும் பசிக்குப் புகலற்று புதல்வர்கள் சோர்ந்து திரியக் காண்கிறோம். அக்காட்சிகளை நினைக்கும்போது பொய்யில் புலவர் மெய்யுறப் புகன்ற ‘இரு வேறுலகத்தியல்பு' புலனாம்.

“கொடியது கொடியது வறுமை கொடியது” என்று குமுறுகின்றது ஓர் மெல்லிய உள்ளம். "நேற்றுக் கொன்று போட்டுச் சென்ற வறுமை இன்று வருமா?” என ஏங்குகின்ற வறியவன் ஏக்கத்தைப் படம் பிடித்துக் காட்டுகின்றது ஓர் அருள் உள்ளம். “இல்லெல்லாம் இரத்தல் அந்தோ இழிவு இழிவு" என்று கனிகின்றது ஓர் ஒப்புரவு உள்ளம், வறுமையின் கொடுமை இத்தகைத்தாம்.

வறுமை கொடிது தான்! வறுமையில் காடிது ல்லையோ? உண்டு, அஃதெது? அதுவே வறுமை உள்ளம்.