உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூட ாது.

வாழ்வியல் வளம்

83

அலுத்தபின் ‘கால்கூலி’ தருவதுபோல் தரவே செய்வர். இன்னும் சிலரோ மனத்திரையைக் கிழித்து வீசி எறிவர். ஆதலால் அவர் தரும் எளிய பொருளை எண்ணி அருங்கலமாம் மானத்தை இழக்கக் கூடாது. உயர்ந்த மனிதப் பண்பை இழந்துவிடக் போய்வரும் புன்பொருளைக் கருதிப் போனால் வாராத மானத்தை இழந்து விடுவது அறிவின்மை அனைத்திலும் தலைமையான அறிவின்மை ஆகும். நீங்கள் இரந்து திரிய வேண்டா என்பதே நான் உங்களிடம் இரப்பது” என்றார்.கூட்டத்தில் அமைதி நிலவியது. கேள்வி கேட்டவர்களும் வாயடைத்துப் போயினர், வந்த பெரியவர் தம் கருத்தை அவர் களுக்கு இரண்டு வரியில் சொன்னார்,,

இரப்பன் இரப்பாரை யெல்லாம்; இரப்பின் கரப்பார் இரவன்மின் என்று

பாட்டை மனப்பாடம் செய்து கொண்டனர்; பொருள் விளக்கமும் தெரிந்து கொண்டனர்- ஆனால் சிலரால் தான் இரப்புக்கலத்தைப் பலர், பழகிப்போன மானம் இழந்து மரத்துப் போன - பரம்பரை இரவலராக இருந்தனர். அவர்களுக்கும் தங்களுடன் இருந்த சிலர் திருவோட்டைத் தூக்கி எறிந்து விட்டு உழைக்க இறங்கிய செயல். மின்னற் கீற்றுப்போல் பாய்ந்து உணர்ச்சியை ஊட்டியது என்றாலும் அந்த உறுதிப்பாட்டில் நிலைத்து விட்டார்கள்அல்லர்; சில நாட்களில் உணர்ச்சி எங்கோ ஓடி ஒளிந்து கொண்டது போல் இருக்கிறது. திருவோட்டிலேயே மீண்டும் அடைக்கலமாகி விட்டனர் மானத்தினும் உயிர்வாழ்வே உயர்ந்தது என்பவர்களிடம் உறுதிப்பாட்டை உயர்ந்த குறிக்கோள்களை-எதிர்பார்க்க முடியுமா? எல்லாரும் மானமுள்ள இரவலர்களாக இருப்பவர் களானால் அந்தக் கூட்டம் இவ்வளவு பெருகிக் கொண்டே போகுமோ? ‘பிச்சி' நாகரிக உலகில் ஒரு கலையாகப் போய் விட்டது என்பது கூட உண்மைதான். உழைப்புக்கு மதிப்புக் குறைக்க நாட்டில் காலத்தில் உழையாத சோம்பர்க்கும் இரவலர்க்கும் திண்ணை தூங்கிகளுக்கும் மதிப்பு இருந்தே தீரும். தராசின் ஒரு தட்டுத் தாழ்ந்தால் இன்னொரு தட்டு உயராமல் என்ன செய்யும்? உழைப்புக்குப் பெருமை தரும் உலகிலே இரப்பது பெருங்குற்றமாகக் கருதப்படும்; கருதப்பட வேண்டும் என்பது வள்ளுவர் கருத்து. அதனை நயமாகக் கூறினார். எனக்

-