உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

இளங்குமரனார் தமிழ்வளம்

18

மனம்

“வாய்ப்பு இல்லாதவன்தான், இரப்பவனுக்கு இல்லை என்று சொல்வான் என்பது இல்லை. இருப்பவனும் கூட இல்லாத காரணத்தால், செல்வத்தின் மேலுள்ள பேராசையால் வைத்துக் கொண்டே இல்லை என்று சொல்லுவான்; பழித்தும் பேசுவான். மேலும் கேட்டுக் கொண்டு நின்றால் கழுத்தைப் பிடித்தும் வெளியே தள்ளுவான். அதனால் நீங்கள் நினைப்பது போல் உள்ளவனிடம் இரப்பதும் இழிவேதான். அவன் இல்லை என்று கூறுவதும் உண்மையேதான். அவ்வாறு இருக்க உங்கள் செயல் எவ்வாறு உயர்ந்தது ஆய்விடும்?” விளக்கம் தந்தார்

பெரியர்.

66

.

இரவலாகளாகிய எங்களிடம் இரப்பதற்கும், புரவலர் களாகிய செல்வர்களிடம் இரப்பதற்கும் வேறுபாடு இல்லை என்கிறீர். அது இருக்கட்டும் நீர் எங்களிடம் வேண்டி வந்தது என்ன? என்று கேட்டார் முதிய இரவலர் ஒருவர்.

66

"நான் உங்களிடம் என்ன கேட்கப் போகின்றேன். பிறரிடம் இரப்பது இழிவு என்பது என் கொள்கை. இழிவுடைய இரப்பை ஒருவன் செய்தாலும் செய்யலாம்; கேட்டது கேட்ட அளவில் உவர்ப்புடன், மானம் குறையாத விதத்தில் கிடைப்பதாக இருந்தால். ஆனால், உங்களிடம் ஒன்றைக் கேட்டுப் பெற முடியுமா என்ற திகைப்பே இப்பொழுது உண்டாகின்றது. நீங்கள் சொல்லும் விளக்கம் இருக்கிறதே அது மேலும் என்னைத் தளரச் செய்கிறது து என்ன ஐயா நீரே ஓடித்தேடி வந்தீர், சொல்லாமல் பொழுது கதை வளர்க்கிறீர். எங்களால் முடியுமானால் உறுதியாகக் கொடுக்கிறோம்" என்றார் என்னவென்று அறியும் ஆவல் உடைய ஒருவர். அது பலருக்கு முணுமுணுப்பை உண்டாக்கியது, இனி, என்ன கேட்டு விடுவாரோ என்று.

66

பெரியவர் சொன்னார்; “உங்களிடம் இரப்பது ஒன்றே ஒன்று. அந்த ஒன்றும் எனக்காக இல்லை. உங்கள் மானத்திற்காக மனித இனப் பெருமைக்காக ஐயா இதனைக் கொடு என்று எவரிடத்தும் போய் எதையாவது எப்பொழுதாவது இரந்து திரிய வேண்டா, இந்த ஒன்றையே உங்களிடம்யான் இரக்கின்றேன். சிலர் நினைக்கிறீர்கள் இரந்தால் என்ன என்று. நீங்கள் செல்வர்கள் என்றும், வள்ளல்கள் என்றும் எண்ணிப்போய் இரப்பவர்கள் உயர்ந்த பண்பு உடையவர்கள் அல்லர். சிலர் கொடுக்கலாம்; பலர் கொடுப்பது இல்லை. கொடுக்கும் பலரும் - பலமுறை தேடி