உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வியல் வளம்

81

உண்கலங்களையும் எடுத்து வைத்துக் கொண்டனர். ஓட்டப் பந்தயத்தில் பங்கெடுப்பவர் ‘வீழ்க்கை’ அடிப்பதை எப்படி எதிர் நோக்கி ஓடுவதற்கு இருக்கிறார்களோ அப்படி இருந்தனர் இரவலர்.

பெரியவர் நெருங்கினார்,அவர்கள் அத்துணைப் பேருக்கும் சேர்த்து ஒரு கும்பிடு போட்டார். உங்களை ஒரு செயலுக்காகத் தேடி வந்தேன். நீங்கள் அத்துணைப் பேர்களும் என் மீது இரக்கம் காட்டவேண்டும். அதுவும் இப்பொழுதே இந்த நொடியிலேயே இரக்கம் காட்டியாக வேண்டும். நான் கேட்கும் ஒன்றை நீங்கள் தருதல் வேண்டும்.

இரவலர்களில் சிலர் திகைப்படைந்தனர்: சிலர் தவிப் படைந்தனர். சிலர், பிறர் அறியாமல் அங்கிருந்து நழுவத் தொடங்கினர். வாய்த்துடிப்புள்ள ஒருவர் “ஊர் ஊராக இரந்து திரியும் எங்களிடம் வந்து இரக்கம் காட்ட வேண்டும்; நான் கேட்பதைக் கொடுக்க வேண்டும் என்கிறீர். இதுவரைஇரவலர் களைத்தான் நாங்கள் கண்டிருக்கிறோம். இரவலர்களிடமும் இரந்து திரியும் இரவலர்களைக் கண்டதே இல்லை. நல்ல ஆள் நீர்” என்று எள்ளி நகையாடினார். இதற்குள் சிலபேர்கள் தங்கள் திருவோடு கரைக்குடுக்கைகளை மறைத்துக்கொண்டு தலைமறைவாகி விட்டனர்.

“சரி! பெரியவரே! நீர் எங்களிடம் இரப்பது எது?அதைச் சொல்லும்!” என்று துணிச்சலான இன்னொருவர் கேட்டார்.

“இங்குள்ள அனைவரும் இரவலராக உள்ளீர்கள். இரப்பதை உங்கள் வாழ்க்கைப் பிழைப்பாகக் கொண்டு வீட்டீர்கள். தம் சீர் சிறப்புக்களை இழந்து அடுத்தவர் வாயிலில் சென்று எமக்கு இது கொடு என்று தமக்கு இணையான அல்லது இணையும் இல்லாத ஒருவரிடம் இரந்து உயிர் வாழ்வது இழிவு இல்லையா?” என்றார்

பெரியவர்.

66

‘அது இருக்கட்டும்! நீர் எங்களுக்கு நல்லது சொல்ல வந்து விட்டீர்! நீர் உம் நிலைமையை எண்ணிப்பாரும். செல்வரிடம் இரக்கும் இழிவினும் இரப்பவரிடமே இரப்பது மிகவும் இழிவு ல்லையா? இடந்தெரிந்துகூட இரவல் தொழில் நடத்தத் தெரியாத நீர் எங்களுக்கு அறம் சொல்வதுதான் வேடிக்கையாக இருக்கிறது” என்று குத்தலாகப் பேசினார்.