உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5.“குறள் நெறி”

ஆலமரத்தடியில் ஒரு கூட்டம் கூடியிருந்தது. கூட்டத்தில் இருந்தவர்களுள் பலர் காவியுடையுடன் காணப்பட்டனர். சிலர் வெள்ளையுடையுடனும் இருந்தனர். என்றாலும் எல்லார்கையிலும் தவறாமல் திருவோடோ,சட்டியோசுரைக்குடுக்கையோ இருந்தன, அவர்களின் கும்மாளம் ஆலமரப் பறவைகளின் ஆரவாரத்தையும் அடக்கிக் கொண்டிருந்தது. கூடியிருந்தவர்களுக்கு ஒரே ஒர் வேலைதான் உண்டு. 'ஊர் சுற்ற வேண்டியது; வீடுகளில் சோறு வாங்கவேண்டியது; உடல் கொழுக்க உண்ண வேண்டியது உழைப்பு மிக மிக சுருங்கிப் போயிற்று அல்லவா?

ல்

உடல் நோக உழைப்பது, வியர்வை கொட்டுவது ஆகியவை அவர்களுக்கு இல்லை ஏன் இல்லை? மானம் என்னும் ஒரு பொருள் அவர்களிடம் இல்லை. கால் கை இருந்தும், உடல் வலிமை இருந்தும் தான் உழைக்காது தன்னைப் போன்ற ஒருவனிடம் போய்க் கை நீட்டி “ஐயா சோறு போடு: துணி கொடு: காசு தா” என்று கேட்டுத் திரிவது மானக்கேடு இல்லையா? போகவிடக் கூடாத மானத்தைப் போக்கி வாழும் வாழ்வும் ஒரு வாழ்வா? மானத்தை இழந்து இழந்து பழகிப்போன அவர்கள் மரத்துப்போன உள்ளங்களுக்குத் தோன்றுவது இல்லையே மானக்குறை. ஆனால் அப்படி மற்றவர்களுக்கும் தோன்றாது போய் விடுகின்றதா?

கூட்டம் கூடியிருந்த ஆலமரத்தடியை ஒருவர் அடைந்தார். அவர் அக்கூட்டத்தை நெருங்கிய உடனே அக் கூட்டத்தினரிடம் மகிழ்ச்சி காணப்பட்டது. “பிச்சைக்காரர்களுக்குச் சாப்பாடு போடுவது பெரும் புண்ணியம்” என்னும் கருத்து வளர்ந்து விட்டது நம் நாடு அல்லவா! து

அதனால் நம்மை அழைத்துக் கொண்டு போய்ச் சோறு போடவே இப்பெரியவர் வருகிறார் என்று எண்ணி மகிழ்ச்சியை ஓரளவு அடக்கிக்கொண்டு வந்தவரை நோக்கினர். தங்கள்