உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வியல் வளம்

79

“நீங்கள் தொண்டு செய்யச் செல்லலாம்” என்றார் புத்தர் பிரான் தொண்டில் புகும் அனைவருக்கும் உரிய அறை கூவல் அன்றோ இது

புத்தர் உலகியலை நன்கு ஆராய்ந்தவர். மணிமணியான கருத்துகளை வழங்கியுள்ளார்.

அதனால்

“உலகோர் அமைதியாக இருப்பவனையும் பழிக்கின்றனர்; மிகுதியாகப் பேசுபவனையும் பழிக்கின்றனர்: குறைவாகப் பேசுபவனையும் பழிக்கின்றனர். இஃது இன்று தோன்றியது அன்று. பழமை தொட்டே வருவது. பழிக்கப் படாதவர் எவருமே உலகில் இலர்? முற்றிலும் பழிக்கப் பட்டவரும், முற்றிலும் புகழப்பட்டவரும் ஒருகாலும் இருந்ததில்லை. ருக்கப் போவதும் இல்லை; இப்பேதும் இல்லை.

99

வாழ்வில் வெற்றி கண்டவர் புத்தர். அவர் எவற்றை எவற்றால் வெல்ல வேண்டும் என்பதை விளம்புகிறார். “சினத்தை அன்பால் வெல்க” தீயதை நல்லவற்றால் வெல்க”; "கருமித்தனத்தைக் கொடையால் வெல்க”; “பொய்யை மெய்யால் வெல்க”; ஆயிரம் பகைவரை வெல்பவனிலும் தன்னை வெல்பவனே பெருவீரன்! ஆம்! புத்தர் பெருமான் தம்மை வென்ற பெருவீரர்.

மாரனை வெல்லும் வீர நின்னடி!

தீநெறிக் கடும்பகை துறந்தோய் நின்னடி! பிறர்க்கறம் முயலும் பெரியோர் நின்னடி!

துறக்கம் வேண்டாத தொல்லோய் நின்னடி!