உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

66

இளங்குமரனார் தமிழ்வளம்

18

'கூரை வேயப்படாத வீட்டினுள் மழைநீர் பாய்ந்து செல்வதுபோல், நன்னெறிப் பயிற்சியில்லாத மனத்தினுள் ஆசைகள் புகுந்து விடுகின்றன.”

ஞானியர் உறவு எவருக்குப் பயன்படுகிறது என்பதை இயம்புகிறார் புத்தர்; நாக்கு, குழம்பின் சுவையை அறிகிறது. அதுபோல் கருத்துள்ளவன் சிறிது நேரம் ஞானியுடன் பழகினாலும் அவன் அறத்தின் இயல்பை அறிந்து கொள்கிறான். அகப்பை, குழம்பின் சுவையை அறியாது, அதுபோல் அறிவிலி வாழ்நாள் முழுவதும் ஞானியுடன் பழகினும் அறத்தை அறியான்.

துறவிகள் ஊருள் நடமாடும் வகையை நவில்கிறார் பெருமான்: "மலரில் தேன் எடுக்கும் ஈ மலருக்குக் கேடு ல்லாமல் மலரின் வண்ணமும் மணமும் சிதையாமல் தேனைக் கொண்டு செல்வதுபோல் துறவி ஊருள் நடமாட வேண்டும்’ இம்மொழி நாட்டுப் பணிகளில் ஈடுபடும் தொண்டர்களுக்கு இன்றியமையாதது.

சமயத் தொண்டு செய்யச் செல்லும் சீடர்களிடம் புத்தர் பெருமான் உரையாடினார்.

"சீடர்களே, நீங்கள் தொண்டு செய்யப் புறப்படுகிறீர்கள்: உங்களை யாரும் வரவேற்கவில்லையானால், என்ன செய்வீர்கள்?” "மகிழ்ச்சியடைவோம்: அவர்கள் எங்களை வரவேற்க வில்லைஎன்றாலும் வெறுத்துரைக்கவில்லை அல்லவா அதனால்” “வெறுத்தால்?”

“வெறுத்தாலும் மகிழ்ச்சியடைவோம்: அவர்கள் எங்களை

அடிக்கவில்லை அல்லவா!”

66

66

அடித்தால்?”

‘அப்பொழுதும் மகிழ்வோம் எங்களை அவர்கள் கொல்ல வில்லை அல்லவா!?”

ஒருவேளை கொன்று விட்டால்?”

66

அதுவும் நன்மையே எங்களுக்கு அவர்கள் விரைவில் விடுதலை வழங்குகிறார்கள் அல்லவா!”