உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 18.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வியல் வளம்

77

ஒருவர் உள்ளார்ந்த அன்பர் பலரைக் கொண்டிருக்கிறார். மற்றொருவரோ, ‘என்ன?” என்று கேட்பதற்கும் ஒரு துணை இல்லாமல் உழன்று தவிக்கிறார். இவற்றுக்குக் காரணம் என்ன? புத்தர் பெருமான் விளக்குகிறார்; ஒரு மரத்தில் தீப்பற்றிக் கொழுந்து விட்டு எரிகின்றது. அங்கே பறவைகள் நெருங்குமோ? பண் இசைத்துப் பறக்குமோ? கூடு கட்டிக் குஞ்சும் குடியுமாக வாழுமோ? ஒருவன் மனமே தீயாக எரியுமானால் நல்ல குணங்கள் நெருங்குமோ? அன்பர்கள் அணுகுவரோ? என வி னவுகிறார். சினம் பொறாமை முதலிய தீக்குணங்களை யுடையவர்களிடம் அடக்கம் அன்பு முதலிய நற்குணங்கள் சேரா; நல்லவர்களும் நெருங்கார் என்பதை வலியுறுத்துகிறார்.

புத்தர் உரைகளுள் மிகுந்த பேரிடம் பெற்றது ‘தன்மம்’ என்னும் அறமாகும். அறம் இல்லையானால் சங்கத்தால் ஆவதென்ன? புத்தத் தன்மையால்தான் ஆவதென்ன? ஆதலால் அறத்தை மிக வலியுறுத்திய புத்தர் ‘அறவோர்' எனப் பெற்றார். ‘அறிவியங் கிழவோன்' எனவும் பெற்றார். அவர் அறத்தைப் பற்றிக் கூறுகிறார்.

"இரும்பில் இருந்து பிறக்கும் துரு, அவ்விரும்பையே அழித்துவிடும். அதுபோல் அறத்தைக் கொல்பவனை அறமே கொன்றுவிடும்.” அறக்கேடு புரிவதில் ஈடுபடும் நெஞ்சம், வ்வறவோர் உரையை ஆழப் பதித்துக் கொள்ளுமானால் அழிவுக்கு ஆட்படாது அல்லவா! தன்னையும் தன்னைச் சார்ந்தாரையும் அழிவுக்கும் இழிவுக்கும் ஆட்படுத்தா தல்லவா!

66

'வாழ்வில் துன்பமும் இன்பமும் தொடரும் வகையைத் துலக்குகிறார் பெருமான்;

“மனிதன் தீய எண்ணத்துடன் பேசினாலும் செயல் புரிந்தாலும் வண்டிச் சக்கரம் மாட்டைத் தொடர்ந்து செல்வது போல் துன்பம் அவனைத் தொடர்ந்து செல்லும் மனிதன் நல்ல எண்ணத்துடன் பேசினாலும் செயல் புரிந்தாலும் நிழல் தொடர்ந்து செல்வதுபோல் இன்பம் அவனைத் தொடர்ந்து செல்லும்.

66

ஆசையே துன்பத்துக்குக் காரணம்: ஆசை அறுமின்கள்: ஆசை அறுமின்கள் என்றவர் புத்தர் பெருமான், ஆசை ஒருவனுக்குள் புகும் வகையை அருமையாகக் கூறுகிறார்.